கரகாட்டக்காரன் படத்தைப் பொறுத்தவரை அதன் உண்மையான கதை எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சிவாஜி, பத்மினி ஜோடியின் காலத்தால் மறக்க முடியாத காவியப்படைப்பு தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தில் வரும் பல சிறப்பம்சங்களுடன் கரகாட்டக்காரன் படமும் ஒத்துப்போகிறது. சிவாஜிக்குப் பதில் இங்கு ராமராஜன் நடித்துள்ளார்.
பத்மினிக்குப் பதில் இங்கு கனகா நடித்துள்ளார். அதே போல ஜூனியர் பாலையாவுக்குப் பதில் கவுண்டமணியும், நாகேஷூக்குப் பதில் சந்திரசேகரும், நம்பியாருக்குப் பதில் சந்தான பாரதியும் நடித்துள்ளனர். ஒவ்வொருவரின் கேரக்டரைப் பார்த்தால் நமக்கு இது புரிந்து விடும்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு திருவிழாவுக்கு நாட்டியம் ஆட பத்மினியும், நாதஸ்வர கோஷ்டியினரும் வருகின்றனர். சிவாஜி நாதஸ்வர வித்வான். பத்மினி நாட்டியக்காரி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை. பார்க்கும் போது அவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆரம்பத்தில் முட்டல், மோதல் என்று வந்து அதன்பின் காதலாகிறது.
அதே போலத் தான் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா இருவரும் கரகாட்டக் கலைஞர்கள். ஊர்த்திருவிழா நடக்கிறது. ராமராஜன் வெளியூர் ஆட்டக்காரர். அவர் உள்ளூர் ஆட்டக்காரி கனகாவை சந்திக்கிறார். வழக்கம் போல காதல் அரும்புகிறது. கனகாவின் மாமா சந்திரசேகர் உள்ளூர் பண்ணையார் சந்தான பாரதிக்கு செட்டப் செய்யப் பார்க்கிறார்.
இது போலத் தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் பத்மினியை முதலில் பண்ணையாருக்கும், பின்னர் ராஜாவுக்கும் செட்டப் செய்ய அலைகிறார். இந்தக் கோஷ்டியில் சீனியர் பாலையா. அவர் கலாட்டா காமெடி செய்கிறார். அதே போல ராமராஜன் நாதஸ் கோஷ்டியில் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா குழுவினர் காமெடியில் பட்டையைக் கிளப்புகின்றனர். தமிழ்சினிமா உலகில் காமெடியில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய படம் இது தான். இனி யாரும் இது போன்ற படத்தை எடுக்கவும் முடியாது.
இதையும் படிங்க… அந்த பாடலை பாடும்போதே அழுத பி.சுசிலா!.. சொந்த வாழ்வில் பாடகிக்கு இப்படி ஒரு சோகமா?..
இந்தப் படத்தில் வரும் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளைப் போல யார் நடித்தாலும் எடுபடவும் செய்யாது. இப்படிப்பட்ட கதை அம்சம் கொண்ட படங்களை மீண்டும் எடுக்கவும் முடியாது. அப்படி எடுத்து கையை சுட்ட படம் தான் சங்கமம். பாடல்கள் செமயாக இருந்தும் படம் ஓடவில்லை. அதே போல இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், ஆண் பாவம், சுவரில்லாத சித்திரங்கள், ரோஜா என ஒரு சில படங்களைப் போல தரமான படங்களை மீண்டும் எடுத்துவிட முடியாது.
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…