Cinema History
சிவாஜியின் அந்த கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தவரு யாரு தெரியுமா? அவரே வாயடைத்துப் போனாராம்!..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்து 22 ஆண்டுகள் கழித்துத் தான் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்தார். ராஜாவில் 5 நிமிடம் மட்டுமே போலீஸ்காரர் வேடத்தில் வருவார். சிலர் நடிப்பது போல எக்கச்சக்கமான தலைமுடி, ஸ்டெப் கட், அடர்த்தியான கிர்தா என இல்லாமல் ஒட்ட வெட்டிய கிராப் மற்றும் மீசையுடன் வருவார். பார்ப்பதற்கு அச்சு அசல் காவல் அதிகாரி மாதிரியே தோற்றம் அளிப்பார்.
அந்தவகையில் தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மேக்கப் ரொம்பவே கவனிக்க வைக்கும். ஹேர் ஸ்டைல், மீசை அனைவரையும் கவர்ந்தது. படத்தில் கம்பீரமான அந்த நடை, உடை, பாவனைகள் தான் அனைவரையும் மிகவும் ரசிக்க வைத்தன.
நடிகர் திலகம் ஒருநாளும் வியாபார காரணங்களுக்காக கலைத்தன்மையை இழந்தது இல்லை. இந்தப் படம் வெளியான சில மாதங்களிலேயே என் மகன் படத்தில் வேறு மாதிரியான போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தார். வெள்ளை ரோஜா, தீர்ப்பு, திருப்பம் என எல்லாமே வேறு வேறு ரகங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார்.
காவல்துறை அதிகாரி தேவாரம் இந்தப் படம் பார்க்க வந்தாராம். அப்போது நடிகர் திலகம் சிவாஜி இந்தக் கதாபாத்திரத்தை ஒரு அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்துத் தான் நடித்திருந்தேன். அது யார் என்று உங்களுக்குத் தெரியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் தெரியாது என்று சொல்ல, உங்களை வைத்துத் தான் என்று தேவாரம் சொன்னாராம். அப்போது அவரே ஆச்சரியப்பட்டாராம்.
இதையும் படிங்க… நக்மாவால தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படமே உருவாச்சு! ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கேட்டா ஆச்சரியப்படுவீங்க
பல வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை தான் சிவாஜி தேவாரத்தைப் பார்த்தாராம். அப்போது ஊட்டியில் சிவாஜி படத்தின் சூட்டிங் நடந்ததாம். அங்கு வந்த காவல் துறை அதிகாரி தேவாரம் அவர் பாணியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினாராம். அப்போது நடிகர் திலகத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றாராம். அப்போது அவரது உடல்மொழியைக் கூர்ந்து கவனித்துத் தான் இந்தப் படத்தில் பல வருடங்கள் கழித்து வந்த தங்கப்பதக்கம் படத்தில் நடித்து அசத்தினாராம்.
தங்கப்பதக்கம் தெலுங்கில் ரீமேக் ஆனது. இந்தியில் ரீமேக் ஆனது. ஆனால் தமிழில் சிவாஜி நடித்த அளவுக்கு மற்ற மொழிகளில் படங்கள் எடுபடவில்லை.