Cinema History
நான் எதுக்கு காப்பி அடிச்சேன் தெரியுமா? தேவா சொன்ன எதார்த்தமான உண்மை…!
90களில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் இசை அமைப்பாளர் தேவா. இவரது இசையில் மெலடி பாடல்கள் சூப்பராக இருக்கும். அதிலும் கானாவுக்கே பெயர் போனவர். அதனால் கானா பாடல்கள் அல்டிமேட்டாக இருக்கும். இவர் பெரும்பாலும் அந்தப் பாடல்களை சொந்தக்குரலில் பாடி அசத்தி விடுவார்.
இவரைப் பற்றி தற்போது காப்பிகேட் என்று சொல்கிறார்கள். அதிலும் வலைதளங்கள் வந்ததுக்குப் பிறகு தான் இந்தப் பெயரே வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. அப்படின்னா என்னன்னு பார்க்கலாமா….
வைகாசி பொறந்தாச்சு
Also read: மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை வெல்லும் ஏ.ஆர்.ரஹ்மான்?!.. விருது பட்டியலில் அந்த படம்!….
மனசுக்கேத்த மகராசா, வைகாசி பொறந்தாச்சு படங்களில் தேவா தான் இசை. இந்தப் பாடலுக்கு யார் இசை என்று கேட்காதவர்களே இல்லை எனலாம். அப்படிப்பட்ட பாடல்கள் அவரது இசையில் வந்தன. குறிப்பாக வைகாசி பொறந்தாச்சு படம் தான் பிரசாந்துக்கு முதல் படம். அந்தப் படத்தின் இமாலய வெற்றிக்குக் காரணமே பாடல்கள் தான். தேவாவின் இசை படத்திற்குப் பெரிதும் உதவியது.
டைட்டில் கார்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு டைட்டில் கார்டு போடும்போது தேவா தான் அவருக்கு இசை அமைத்தார். அண்ணாமலை படத்தில் இருந்து தான் இது அமர்க்களமாக அரங்கேறியது. ‘சூப்பர்ஸ்டார்’ (SUPER STAR) என்று ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தாக வரும். அப்போது சர் சர்னு தேவாவின் மியூசிக் அனல் பறந்தது. அந்த டைட்டில் கார்டு மியூசிக் ரஜினிக்கு இன்று வரை வலம் வருகிறது. அவ்வளவு பெரிய வெற்றிக்குச் சொந்தக்காரர் தான் தேவா.
இவரைப் பற்றி காப்பி கேட்னு சொல்றாங்க அல்லவா. இதற்கு தேவா என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க.
நான் என்னம்மா செய்றது? அப்படி தான் வந்தாங்க. வரும்போதே ஒரு இந்தி பாட்டு கேசட்டைக் கொண்டு வந்து சார் இது மாதிர பாட்டு வேணும்னு கேட்குறாங்க. கந்த சஷ்டி கவசம் மாதிரி டூயட் வேணும்னு கேட்பாங்க. அப்போ நமக்கு தெரியாது. இப்படி எல்லாம் பாட்டு போடுறோம். பின்னாடி யூ டியூப், சோஷியல் மீடியாவுல எல்லாம் காப்பி அடிச்சதை சொல்வாங்கன்னு தெரியாது.
காப்பி அடிக்கவே… இல்லை
அவங்க இந்தப் பாட்டு மாதிரி வேணும்னு கேட்பாங்க. நான் சொல்லி பார்ப்பேன். என் சொந்த இசையை யூஸ் பண்றேன்னு சொல்வேன். கேட்கலைன்னா அவங்க கேட்குறதையே போட்டுக் கொடுத்துருவேன். நான் காப்பி அடிக்கவே இல்லைன்னு சொல்லவே இல்லை. நிறைய அடிச்சிருக்கேன்.
பாட்டு கேசட்டோட வந்து இது மாதிரி வேணும்னு கேட்குறவங்க கிட்ட போய் போயா போட முடியாது. வேற ஆளைப் பாருன்னு எப்படி சொல்றது? நான் என் சொந்த மியூசிக்கைத் தான் போடுவேன்னு எப்படி சொல்ல முடியும்? இன்னொன்னு நான் அப்படி மறுக்குற அளவுக்கு உயரத்துலயும் அந்த நேரத்துல இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.