More
Categories: Cinema History Cinema News latest news

என்ன நடிகன்னு நினைச்சியா!.. தப்பு செய்தவரை எட்டி உதைத்த எம்ஜிஆர்!. ராமாவரம் தோட்டத்து ரகசியங்கள்..

தமிழகத்தின் 5 முதல் அமைச்சர்களுக்கு கார் ஓட்டியவர் பவானி கிருஷ்ணன். இவர் அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், ஜானகி, ஜெயலலிதாவுக்கும் நான் தான் கார் டிரைவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரொம்ப தைரியமானவர் என்றும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் இவர் என்ன சொல்கிறார்னு பாருங்க.

எம்ஜிஆர் திமுகவில் இருந்து தனியாக பிரிந்து வந்த நேரம் அவருக்கு நான் டிரைவராகிறேன். அப்போ எங்கிட்ட அவரு சொல்றாரு. நான் ஒன்மேன் பார்ட்டி. என்னைக் கொல்றதுக்குத் தான் வருவாங்க. அதனால வண்டியை எங்கேயும் நிப்பாட்டாத.

Advertising
Advertising

அடிச்சி போய்க்கிட்டே இரு. யாரு என்ன கொடுத்தாலும் வாங்காதே. யார் அப்படி வந்தாலும் அவங்களைக் கொன்னுட்டுத்தான் எனக்கு எதுவுமே. நான் ஒண்ணும் ஆகமாட்டேன். கவலைப்படாதேன்னு சொல்வாரு. அவரு எப்பவும் கார்ல ஒரு ரிவால்வர் வச்சிருப்பாரு.

Driver, MGR

ராமாவரம் தோட்டத்துல எம்ஜிஆர் ரொம்ப கோபமா எல்லாம் இருக்க மாட்டாரு. எம்ஜிஆரை யார் பார்க்க ராமாவரம் தோட்டத்துக்கு யார் வந்தாலும் சாப்பிட்டியான்னு தான் கேட்பாரு. யாராவது தப்பு பண்ணி வந்தா அவருக்கு பயங்கர கோபம் வரும். ராமாவரம் தோட்டத்துல 6 மாசம் இருந்தேன். ஆத்தூர்ல ஜெகன்னாதன் எம்எல்ஏ. இருந்தார்.

ஏதோ தப்பு பண்ணிட்டுப் பார்க்க வந்தாரு. அப்போ இவர் சிஎம். வந்த உடனே எட்டி உதைச்சாரு.  ‘முதல் மாதிரி நான் நடிகன்னு நினைச்சியா. என்ன நடந்தாலும் எனக்கு நியூஸ் வரும். நீ தப்பு பண்ணிப்போட்டு கால்ல விழுந்தா விட்டுருவேன்னு நினைச்சியா..? நீ கால்ல விழுந்தா நல்லவனாயிடலாம்னு நினைக்காதே’ன்னு எட்டி உதைச்சாரு. தஞ்சாவூர்ல எலெக்ஷன் டைம்ல போயிக்கிட்டு இருக்கோம்.

இதையும் படிங்க… திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

அப்போ வயல்ல நாத்து நட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் வண்டியை நிறுத்தச் சொன்னாரு. அவங்க வந்து குலவை போட்டாங்க. ஜோப்புல கையை விடும்போது என்ன வருதோ அந்தப் பணத்தை அப்படியே கொடுத்துருவாரு. புகழ்மாலை செய்தாலும் விரும்பாதவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts