latest news
அஜித்தை முந்திய சிவகார்த்திகேயன்.. யூடியூபில் முதலிடம்..!!
சதுரங்க வேட்டை படம் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஹெச்.வினோத். வித்யாசமான கதஹிக்களத்தில் வெளியான இப்படம் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்கை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கினார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து தல அஜித்துடன் கூட்டணி அமைத்த படம்தான் நேர்கொண்ட பார்வை. ஹிந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து இவர் இரண்டாவது முறையாக அஜித்துடன் இணைந்து வலிமை படத்தை எடுத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்க்காக அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக்கொண்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக படங்களின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்குமுன் இப்படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் யூடியூபிலும் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ட்ரைலர் வலிமையை முந்தி யூடியூபில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆனால் டாக்டர் வீடியோ வெறும் 50 லட்சம் பார்வைகளையும், 3.9லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
வலிமை Glimpse வீடியோ 91 லட்சம் பார்வைகளையும் 8.6 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இப்படம் அடுத்தமாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது.
https://www.youtube.com/feed/trending?bp=6gQJRkVleHBsb3Jl