Connect with us

அதற்குள் சன் டிவியில் டாக்டர் படம்.. அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

doctor movie

latest news

அதற்குள் சன் டிவியில் டாக்டர் படம்.. அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் டாக்டர். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தையடுத்து நெல்சன் இயக்கும் படம் இதுவாகும்.

கடந்த 9ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூலிலும் கலக்கி வருகின்றது. கொரோனா காரணமாக தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படியிருந்தும் இப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

கொரோனா காரணமாக தியேட்டர்கள் நீண்ட நாட்களாக மூடியிருந்தாலும், தியேட்டர்கள் திறந்தபின்னும் எந்த ஒரு பெரிய நடிகரின் படம் வராததால் தியேட்டர் வெறிச்சோடி காணப்பட்டது. சிவகார்த்திகேயனுக்கு பொதுவாகவே குழந்தைகள் மற்றும் பெண்கள் ரசிகர்கள் ஏராளம்.

doctor

இதனால் இந்தப் படத்தை குடும்பமாக சென்று பார்க்கிறார்களாம் ரசிகர்கள். வெளியாகி நான்கு நாட்களில் இப்படம் 20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இப்படத்தையடுத்து நெல்சன் விஜய் படத்தை இயக்கி வருவதால் விஜய் ரசிகர்களும் இப்படத்திற்கு தங்கள் ஆதரவை கொடுத்துள்ளனர்.

இப்படம் வெளியாகி முழுதாக ஒருவாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படம் டிவியில் வெளியாவது பற்றி பேச்சு எழுந்துள்ளது. இப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதே நாளில் இப்படம் சன் நெக்ஸ்டிலும் வெளியாக உள்ளதாம்.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் இன்னும் வரவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் டிவியிலா என்ற அதிர்ச்சியில் உள்ளார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top