கிட்னி திருடும் கும்பலுக்கு தலைவனாக சிவகார்த்திகேயன் - டாக்டர் டிரெய்லர் வீடியோ

by சிவா |   ( Updated:2021-09-25 12:40:13  )
doctor
X

கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கஞ்சா கடத்தலை காமெடியுடன் கூறிய இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வெற்றிப்படமாகியது.

இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு பிரியங்கா அருள்மோகன், டிவி தொகுப்பாளினி அர்ச்சனா,தீபா சங்கர்,யோகிபாபு,வினய் ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

doctor2

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கிட்னி கடத்தும் கும்பலுக்கு தலைவன் போல் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

உண்மையான கதை என்ன என்பது படம் பார்க்கும் போதுதான் தெரியவரும். இப்படத்தி அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Next Story