Cinema News
செம மாஸ்… சிவகார்த்திகேயன் வேற லெவல்…டாக்டர் டிவிட்டர் விமர்சனம்….
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் தற்போதுதான் ரிலீஸ் ஆகியுள்ளது. அதுவும் ஓடிடி ரிலீஸ் என வெளியான செய்திகளை உடைத்து இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
சில தியேட்டர்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இப்படத்தை ஆர்வமுடன் சென்று பார்த்தனர். இதில் பலரும் முதல் பாதி முடிந்த பின் படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் பலரும், டாக்டர் முதல் பாதி சிறப்பாக இருந்ததாகவும், சிரிக்கும் படியான காட்சிகள் நிறைய இருந்ததாகவும், குறிப்பாக மெட்ரோ ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எனவும், அதே நேரம் நல்ல திரில்லிங்காக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளனர்.
சிலரோ, எதிர்பார்த்ததை விட டாக்டர் படம் உங்களை சிரிக்க வைக்கும் என பதிவிட்டுள்ளனர். இதுபோல் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு நடித்திருக்கவில்லை எனவும், டார்க் காமெடி அவருக்கு நன்றாக வருகிறது எனவும், அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும் பலரும் பதிவிட்டுள்ளனர்.
அதேபோல், சண்டை காட்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், இதற்கு முன் சிவகார்த்திகேயனை இப்படி பார்க்கவில்லை எனவும், இப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது டாக்டர் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது தெரிகிறது.
தற்போது 2ம் பாதியும் முடிந்து பலரும் படம் வேற லெவலில் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்கு இப்படம் வெற்றிப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.