நல்ல வேளை அந்த படம் தப்பிச்சது!.. சிவகாத்திகேயனை காப்பாற்றிய டாக்டர்...

by சிவா |
doctor
X

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர்’. இப்படத்தில் யோகிபாபு, பிரியங்கா மோகன், வினய், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். சிலர் இப்படத்தை டைம் பாஸ், ஆவரேஜ் எனக்கூறினாலும் படம் நன்றாக இல்லை என எவரும் கூறவில்லை. மேலும், 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

doctor movie

doctor movie

டாக்டர் படம் வெளியாகி முதல் நாளே இப்படம் ரூ.7 கோடியை வசூல் செய்துள்ளது. தற்போது 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் வழக்கமாக வார இறுதி நாட்களில்தான் தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆகும்.

ஆனால், திங்கள், செவ்வாய், புதன் என வார நாட்களிலேயே டாக்டர் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது டாக்டர் படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

doctor

ஒருபக்கம் இப்படத்தின் வசூல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை காப்பாற்றியுள்ளது. விரிவாக கூற வேண்டும் எனில், டாக்டர் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ராஜேஷ்தான் அயலான் படத்திற்கும் தயாரிப்பாளர். டாக்டர் படத்தின் பட்ஜெட் ரூ.45 கோடி எனக்கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் திரைப்படங்களின் வியாபாரம் ரூ.70 கோடி முதல் 80 கோடி வரை இருக்கிறது. எனவே, டாக்டர் படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம்.

ayalan

ஆனால், அயலான் படத்தின் பட்ஜெட்டோ ரூ.80 கோடி எனக்கூறப்படுகிறது. எனவே, ரூ.120 கோடி வியாபாரம் ஆனால் மட்டுமே இப்படம் மூலம் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவு வியாபாரம் இல்லை என திரையுலகில் கூறி வந்தனர்.

ஆனால், டாக்டர் படத்தின் வசூலை பார்க்கும் போது அயலான் எப்படியும் லாபத்தை பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை அப்படத்தின் தயாரிப்பாளரக்கு வந்துள்ளதாம்.

மொத்தத்தில் அயலான் படத்தை காப்பாற்றியுள்ளது டாக்டர் படத்தின் வியாபாரம்.

Next Story