அடுத்த விஜயாக மாறிய சிவகார்த்திகேயன்...டாக்டர் வசூல் எத்தனை கோடி தெரியுமா?...
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர்’. இப்படத்தில் யோகிபாபு, பிரியங்கா மோகன், வினய், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். சிலர் இப்படத்தை டைம் பாஸ், ஆவரேஜ் எனக்கூறினாலும் படம் நன்றாக இல்லை என எவரும் கூறவில்லை. மேலும், 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாகி வருகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.
டாக்டர் படம் வெளியாகி முதல் நாளே இப்படம் ரூ.7 கோடியை வசூல் செய்துள்ளது. தற்போது 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.10 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது டாக்டர் படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கடந்த வருடம் 6 மாதம் கழித்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இதை சாதித்து காட்டியுள்ளது. எனவே, விஜய் ரேஞ்சிக்கு சிவகார்த்திகேயனும் மாறிவிட்டதாக திரைத்துறையினர் கூற துவங்கியுள்ளனர்.