பிரேமலதா விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய எஸ். ஏ.சி!.. கோபித்துக் கொண்ட கேப்டன்.. புதுசா இருக்கே?..
தமிழ் சினிமாவில் விஜயகாந்தை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் எஸ்.ஏ.சியை சேரும். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு விஜயகாந்த் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதில் சில படங்களும் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. எஸ்.ஏ.சியை விஜயகாந்த் எப்பொழுதும் என் இயக்குனர் என்றுதான் சொல்வாராம்.
அந்த அளவுக்கு விஜயகாந்திற்கும் எஸ்.ஏ.சிக்கு நெருக்கம் இருக்கின்றன. சமீபத்தில் கூட விஜயகாந்தின் திருமண நாளன்று நேரில் போய் பார்த்து எஸ்.ஏ.சி தன்னுடைய வாழ்த்துக்களையும் நலமும் விசாரித்த புகைப்படங்கள் வைரலானது. விஜயகாந்த் மீது திரையுலகினர் அனைவருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே இருக்கின்றது.
அதிலும் எஸ்.ஏ.சிக்கு அதிகமாவே இருக்கின்றது. சமீபத்தில் சாய் வித் சித்ராவில் அளித்த பேட்டியில் முழுவதுமாக விஜயகாந்தை பற்றி மட்டுமே பேசி அவரின் பெருமையை மெய்சிலிர்க்க வைத்தார். புகழின் உச்சியில் இருக்கும் நடிகரின் அப்பாவாக இருந்தும் கூட விஜயகாந்த் செய்த உதவிகள், தியாகம் என முழு பேட்டியிலும் கேப்டன் பற்றிய பெருமைகளை தான் பேசிக் கொண்டிருந்தார்..
ஒரு சமயம் விஜயகாந்த் வீட்டின் அருகில் ஒரு இடத்தை வாங்கிருந்தாராம் எஸ்.ஏ.சி. விஜயகாந்த் வீட்டிற்கு பக்கத்தில் நாமும் ஒரு வீட்டை கட்டி அவரின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என நினைத்தாராம். ஆனால் பிரேமலதா நீண்ட நாள்களாக அந்த இடத்தை எங்களுக்கு எழுதி கொடுத்து விடுங்கள், நாங்கள் பெரிதாக வீடு கட்ட நினைக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் எஸ்.ஏ.சி அது முடியாது, நான் அவருடன் எப்பொழுதும் பக்கத்தில் இருக்கனும் என்பதற்காக நான் வீட்டைக் கட்ட போகிறேன் என்று இடத்தை தர மறுத்துவிட்டாராம். அதன் பின் விஜயின் வளர்ச்சியிலும் விஜயகாந்திற்கு ஒரு பங்கு இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்க்காகவே கேப்டன் நடித்துக் கொடுத்தப் படம். ஆனால் அந்தப் படத்தில் சம்பளம் வாங்க மறுத்து விட்டாராம் கேப்டன். இது ஒரு உதவி என்று சொல்லி சம்பளமே வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
ஆனால் எஸ்.ஏ.சி பிரேமலதா நீண்ட நாள்களாக கேட்டு ஆசைப்பட்ட அந்த நிலத்தை அந்த சமயத்தில் பிரேமலதாவின் பெயருக்கு மாற்றியமைத்து பத்திரத்தை கையில் போய் கொடுத்துவிட்டாராம் எஸ்.ஏ.சி. உடனே விஜயகாந்த் கோபத்தில் கத்த என்னை கேவலப்படுத்தி விட்டீர்களே என்று கோபத்தில் கேட்டாராம். ஆனாலும் எஸ்.ஏ.சிக்கு சும்மா எப்படி இருக்க என்று பணம் கொடுத்தால் வாங்க மாட்டிக்காரு , சரி இப்படியாவது தன் கடனை அடைப்போம் என்று எழுதிக் கொடுத்தாராம். இதை அந்த பேட்டியின் போது கூறினார் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க : உலக நாயகனின் ஆஸ்தான இயக்குனர்… கே.விஸ்வநாத்தின் படைப்புலகம்… ஒரு பார்வை…