அஜீத் படத்தில் விஜயைத் தாக்கி பாடல் வரிகள்.. பரத்வாஜ் என்ன சொல்கிறார்னு பாருங்க!..

by sankaran v |
Vijay attack song
X

Vijay attack song

விஜய், அஜீத் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் சினிமாவில் போட்டி போட்டுக் கொண்டு வசனம் பேசுவதும், பாடல்களில் வரிகளைப் போடுவதும் வழக்கமாக வரும். அப்படி ஒரு பாடல் தான் இது. இந்த அஜீத் பாடலில் விஜயைப் பற்றி தாக்குவது போன்ற வரிகள் வருகிறதாம். இது பற்றி இசை அமைப்பாளர் பரத்வாஜ் இவ்வாறு சொல்கிறார்.

உனக்கென்ன உனக்கென்ன என்ற பாடலில் நீ வந்து பொத்தி பொத்தி வச்ச ஆளு, நான் வந்து காட்டுச்செடி என அஜீத் பாடுவது போல வரும். இந்தப் பாடலில் விஜயைத் தாக்கிப் பாடுவது போன்ற வரிகள் வரும். இது இன்னைக்குத் தேதியில வந்தால் கிழிச்சிருப்பாங்க.

அப்போ சோஷியல் மீடியா ஆக்டிவா இல்ல. அதனால அந்த அளவுக்கு அப்போ உள்ள ரசிகர்கள் சீரியஸா எடுத்துக்கல. பாடலை வைரமுத்து தான் எழுதினாரு. இது தற்செயலா எழுதுனது இல்லை. வேணுமின்னே தான் எழுதுனது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் பரத்வாஜ்.

Attakasam

Attakasam

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்ற பாடல் இது. இந்தப் பாடலில் ஜெயித்து விடவோ தந்தையும் இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன என்று வரிகள் எல்லாம் வரும். புதிய கீதை படத்தில் விஜய் ஒரு காட்சியில் இங்கு எவன்டா தலன்னு வசனம் பேசுவார். அதற்குப் பதிலடியாக அஜீத்துக்கும் ஒரு பாடல் வந்தது. அதுதான் அட்டகாசம். இந்தப் படத்தின் பாடல் குறித்து இசை அமைப்பாளர் பரத்வாஜ் சொல்வது இதுதான்.

நானும் சரணும் பாம்பேல இருக்கும்போது இந்தப் பாடலைப் பற்றி பேசி எழுதினோம். ஹீரோவைப் பற்றி புகழ்ற மாதிரி ஒரு பாட்டு. அட்டகாசத்துல தல போல வருமா... இப்படி ஹீரோவுக்கு எழுதுற பாட்டுலாம் ஆச்சரியமா இருக்கும். நானே பாடின பாடல் என்கிறார் பரத்வாஜ்.

இதையும் படிங்க... நல்லா வெள்ள பனியாரம் மாதிரி கும்முன்னு இருக்கே!.. சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!…

இந்தப் பாடலில் நெஞ்சில் பட்டதை சொல்வானே, நெத்தி அடியிலே வெல்வானே, நெருப்பின் உக்கிரன் இவன் தானே, இளமை துடி துடிக்கும் பயல் தானே... இவனுக்கு இரவிலும் வெயில் தானே, அட்டகாசத்தில் புயல் தானே, நீலவானத்தை மடியில் கட்டுவான், நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான், தலையுள்ள பயல்கள் எல்லாம் தல அல்ல... என்று வரிகள் வரும். அட்டகாசம் படத்தில் தான் இந்த இருபாடல்களும் வருகின்றன. இசை அமைத்தவர் பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story