அண்ணன் வராரு! ‘கோட்’ படத்தில் தோனி.. வெங்கட் பிரபுவின் பதிவால் ரசிகர்கள் உற்சாகம்

by Rohini |
dhoni
X

dhoni

Goat Movie: கோட் படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே படத்தை பற்றிய ஏகப்பட்ட கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் வெங்கட் பிரபுவிடம் ஏகப்பட்ட கேள்விகள் முன் வைக்கப்பட்டன. சளைக்காமல் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக இருந்து பதில் கூறியிருந்தார் வெங்கட்பிரபு.

சில நேரங்களில் தக் லைஃப் பதில்களும் வெங்கட் பிரபுவிடம் இருந்து வந்தன. விஜய், சினேகா, மீனாட்சி சௌத்ரி , லைலா, பிரசாந்த், பிரபுதேவா , மோகன் போன்றவர்கள் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் கோட். யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

இதையும் படிங்க: கோபத்தில் முத்து… எழிலை நினைத்து அழுகும் பாக்கியா… மொக்கை வாங்கிய மயில்..

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவரை கடும் அப்செட்டில் இருந்த படக்குழு டிரெய்லர் வெளியான பிறகு மிகவும் குஷியாகி விட்டனர். ஏனெனில் அந்தளவுக்கு கோட் டிரெய்லரை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

டிரெய்லரில் ஏகப்பட்ட அம்சங்கள் படத்தில் இருப்பதாக தெரிகிறது. செண்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த கலவையாகவே இருக்கிறது. கோட் படத்தை பொறுத்தவரைக்கும் விஜயகாந்தும் இந்தப் படத்தில் ஏ.ஐ டெக்னிக் முறையில் வருகிறார் என அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் தங்கலான்… 4 நாள் வசூலைப் பாருங்க..!

அதனாலேயே படத்தின் மீது அனைவர் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதில் விசில் போடு பாடல் முதன் முதலில் வெளியானதும் ஒரு வேளை தோனி இந்தப் படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கேற்ற வகையில் விஜயும் தோனியும் சந்தித்து கொண்ட புகைப்படம் வெளியானது.

டிரெய்லரிலும் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட அம்சங்கள் ஆங்காங்கே படத்தில் காணப்பட்டது. ஒரு காட்சியில் விஜயே மஞ்சள் கலரில் பனியனில் நடந்து வருவது போல் படமாக்கியிருப்பார்கள். ஆனால் தோனி இருக்கிறாரா என்று இதுவரை உறுதியாக தெரியாமல் இருந்தது.

இதையும் படிங்க: பேருக்காகவே சீயான் நடிச்சாரா? விக்ரமுக்கு வேற லெவல் ஹிட் இதுதான்!

இதற்கிடையில் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தோனி மற்றும் கோட் படத்தின் புகைப்படத்தை போட்டு அண்ணன் வராரு என ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதை பார்க்கும் போது கோட் படத்தில் ஒரு வேளை தோனியின் வீடியோ அல்லது ஒரு சின்ன காட்சியிலாவது தோனி வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/stories/venkat_prabhu/3437401488673499895?utm_source=ig_story_item_share&igsh=djVxOGN3OHU4NDRn

Next Story