சிவாஜி குடும்பத்திற்காக கமல் இதை செய்வாரா? பழச நினைச்சு பார்த்தா கண்டிப்பா நடக்கும்..

Kamal - Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் கமலையும் சிவாஜியையும் ஒரே இடத்தில் தான் ரசிகர்கள் வைத்து பார்க்கின்றனர். சிவாஜிக்கு அடுத்த படியாக நடிப்பில் கமலைத்தான் கொண்டாடி வருகிறோம். நடிப்பிற்காக மெனக்கிடுவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

மேலும் சிவாஜியும் கமலும் ஒன்றாக ஒரே படத்தில் சில படங்களில் நடித்திருக்கின்றனர். அதில் அனைவராலும் மறக்கமுடியாத படமாக தேவர் மகன் திரைப்படம் அமைந்தது. சமீபகாலமாக ஜாதியை வைத்து தயாராகும் படங்களுக்கெல்லாம் இந்த தேவர் மகன் திரைப்படம்தான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.

இதையும் படிங்க: இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா?!.. நடிகர்களை மொத்தமா வேஸ்ட் பண்ன லோகேஷ் கனகராஜ்!…

சிவாஜி புரடக்‌ஷன் என்ற பெயரில் அப்பவே கமலை வைத்து ஏராளமான படங்களை சிவாஜி குடும்பம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஆனால் இப்போது அந்த புரடக்‌ஷன் சார்பில் வெளியாகும் படங்கள் மிகக் குறைவுதான்.

அதுமட்டுமில்லாமல் சிவாஜி கட்டிக்காத்து வந்த பெயரை பிரபு ஓரளவு காப்பாற்றிவந்தார். இப்போது பிரபுவும் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. ஆனால் அவர் மகனான விக்ரம் பிரபு சிவாஜி, பிரபு சம்பாதித்ததில் ஒரு பங்கு கூட புகழை சம்பாதிக்க முடிவதில்லை.

இதையும் படிங்க: ஜெயிலர் பட கதையே காப்பி தானா? அதுவும் இந்த தமிழ் படமா? கசிந்த ஆச்சரிய தகவல்..!

ஏதாவது ஒரு சில படங்கள் மட்டுமே விக்ரம் பிரபுவுக்கு கை கொடுத்திருக்கின்றன. இந்த நிலையில் அந்த நேரத்தில் கமலுக்காக சிவாஜி குடும்பம் செய்ததை இப்போது விக்ரம் பிரபுவுக்காக கமல் தன்னுடைய புரடக்‌ஷன் கம்பெனி மூலம் ஏதாவது ஒரு படத்தை தயாரிக்கலாமே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஆனால் ராஜ்கமல் புரடக்‌ஷன் சார்பில் தயாராகும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. அதன் காரணமாகக் கூட விக்ரம் பிரபுவை வைத்து கமல் படம் தயாரிக்காமல் இருந்திருக்கலாம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: லியோ விமர்சனம்.. ஐயா லோகேஷ் இதுதான் உன் 100 சதவீதமா?.. பாவம் சார் விஜய்!

 

Related Articles

Next Story