மைக் மோகனுக்கு அப்படி ஒரு வியாதியா? என்ன சொல்கிறார் இந்த பிரபலம்?

Published on: June 4, 2024
Mohan
---Advertisement---

80களில் தமிழ் சினிமா உலகில் தனது இயல்பான நடிப்பாலும், இளையராஜாவின் ஹிட்டான பாடல்களாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் மோகன். இவர் மைக்கை வைத்துப் பல படங்களில் பாடி அசத்தியதால் இவரை ‘மைக் மோகன்’ என்றே அழைத்தனர்.

இவரது படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கண்டதால் ‘வெள்ளி விழா நாயகன்’ என்றும் அழைத்தனர். அப்போதைய காலகட்டங்களில் ரஜினி, கமலுடைய படங்களுக்கே இவர் டஃப் கொடுப்பார். இவரைப் பற்றி யாருமே அறியாத ஒரு தகவலை மூத்த பத்திரிகையாளர் சபீதா ஜோசப் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

இதையும் படிங்க… கில்லிக்கே சல்லியாயிட்டாங்க! இதுல அந்தப் படமா? விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸாகப் போகும் படம்

மோகனுக்கு எல்லா நடிகர், நடிகைகளுடனும் நல்ல நட்பு உண்டு. இவர் பீக்கில் இருக்கும்போது எய்ட்ஸ் என்று எல்லாம் சொன்னார்கள். அது உண்மையா என நிருபர் கேட்டதற்கு சபீதா ஜோசப் சொன்ன பதில் இதுதான்.

மும்பையில் இருந்து வந்த ஒரு ஹீரோயின் இவரு கூட சேர்ந்து நிறைய படம் பண்ணினாங்க. அவர் பல படங்களில் ஜோடியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் இருந்தது. இதைப் பார்த்து அவரது வருங்காலக் கணவர் கூட பார்த்து ‘இதெல்லாம் ஒரு பெண்ணா’ன்னு கிண்டல் அடித்தார்.

அப்புறம் மாறிட்டாங்க. அப்போ அவரு இவங்களை கல்யாணம் பண்ணாம வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதனால அவங்க பாதிச்சாங்க. அதனால ஏதோ ஒரு சிக்கலை கிளப்பி விட்டாங்க.

அதைப் பத்தி பெரிசா பேசல அவரு. மற்றவங்க அது உண்மையான்னு நினைச்சிடுவாங்கன்னு அதைத் தவிர்த்து விட்டார். அதே நேரம் அதனால அவரு பெரிய அளவிலும் பாதிக்கலை.

மோகனுக்கு டப்பிங் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். இவர் கூட அடிக்கடி சொல்வாரு. மோகன் எனக்கு நன்றியே சொன்னது இல்லன்னு. 118 படங்களுக்கு டப்பிங் பேசிருப்பாரு. இவரால தான் அவர் வாழ்ந்தாரு. இவர் டப்பிங் பேசினதனால தான் அவருக்கு நிறைய வாய்ப்பு வந்ததுன்னு சொல்லலாம். மோகனுக்குத் தான் அவர் நன்றி சொல்லணும்.

இதையும் படிங்க… 80ஸ் மட்டுமல்லாம 2கே கிட்ஸ்களையும் தட்டிதூக்கிய டி.ராஜேந்தர்… யாருமே அறியாத அந்த சில தகவல்கள்

ஆனா அவரு அப்படி சொன்னதால மோகனுக்கு சங்கடமாயிடுச்சு. இப்ப நிறைய பக்குவப்பட்டுட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ‘ஹரா’ படத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மோகன். அதே போல விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்திலும் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.