Cinema News
வீட்டு வேலைக்காரர்களை கேவலமாக நடத்துகிறாரா ரஜினி? பிரபலம் கொடுத்த ‘நச்’ பதில்!..
பொதுவாக பிரபலங்களின் வீட்டில் வேலை கிடைப்பதே குதிரைக்கொம்பு. அந்த வாய்ப்பு தான் அங்கு பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம். அதனால் அங்கு அவர்களுக்குப் பாதகமாக என்ன நடந்தாலும் வெளியே சொல்லவே பயப்படுவார்கள். ஏன்னா அது அவர்களது வேலைக்கே ஆபத்து.
அதனால் அதை அப்படியே சகித்துக் கொண்டு விட்டு விடுவார்கள். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் வேலை செய்பவர்களுக்குத் தொல்லையா என ஒரு நிருபர் பிரபல பத்திரிகையாளர் கோடங்கியிடம் கிடுக்கிப்பிடி கேள்வி ஒன்றை முன்வைக்கிறார். அதற்கு அவர் சாமர்த்தியமாக சொன்ன பதில் என்னவென்று பார்ப்போமா…
ரஜினிகாந்த் தன்னோட வீட்டுல பணிபுரிபவர்களைப் புகைப்படம் எடுக்கும்போது தனியாக தள்ளி நிற்கச் சொல்லுவாராம். அதே போல திரையரங்கில் படம் பார்க்கும்போது பின்சீட்டில் உட்காரச் சொல்லுவாராம். இதற்கு பத்திரிகையாளர் கோடங்கி இதைத் தான் பதிலாகச் சொல்கிறார்.
இந்த மாதிரி தன்னோட வீட்டில் பணிபுரியும் பெண்களை மதிக்காதவராக இருந்தால், அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவரு போனாலே பத்து பேரு வந்து நிற்பான். எப்பவுமே பிரபலமானவர்கள் வீடுகளில் வேலை செய்பவர்கள் மனரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். அதுல இந்த மாதிரியான பிரச்சனையும் ஒண்ணு. அவர்களுக்கு உண்மை தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியாது. சொன்னாலும் தப்பு. சொல்லாம இருந்தாலும் தப்பு. அந்த மாதிரியான நிலைமை அவர்களுக்கு உண்டு. இப்போது பேசுவதால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா என்றால் இல்லை.
இன்னொன்று, ரஜினியோ, லதாவோ, ஐஸ்வர்யாவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் நிஜமாகவே நியாயமாக நடந்து கொண்டாலும், வெளிப்பார்வைக்கு வேலைக்காரப் பெண்ணைக் கொடுமைப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும், அசிங்கப்படுத்துவதாகவும் ஒரு பேச்சு அடிபடுவதாகவே வைத்துக் கொள்வோம்.
அதனால் அந்தப் பெண்ணை இனிமே வேலைக்கு வராதம்மான்னு அனுப்பிட்டாங்கன்னா, அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கெடுத்ததற்கான பெரும்பங்கு ஊடகத்தில் பேசுபவருக்குத் தான் வரும். இப்படிப் பேசுறதால பலன் இருந்தால் தான் பேசணும். இல்லாவிட்டால் தயவுசெய்து விட்டுருங்க என்றார் கோடங்கி.