தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியாகும் அனைத்து படங்களும் ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர், செகண்ட் ஹாஃப் சுமார் எனும் ரகத்திலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் அமைந்துள்ளது. இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி டான் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமைந்ததா என்று பார்த்தால் இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
தலைவலி ஆக்ஷன் காட்சி படங்களுக்கு நடுவே ஜாலியான படத்தை கொடுத்து தியேட்டரில் நிம்மதியாக வன்முறை காட்சிகள் அதிகம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க வைத்த இடத்திலேயே ஜெயித்து விடுகிறார் சிவகார்த்திகேயன். இதே ரூட்டில் போங்க, தேவையில்லாமல் ஆக்ஷன் ஹீரோவாக இப்போதைக்கு அல்ல எப்போதுமே மாற வேண்டாம்.
தன்னைப் போல தனது மகனும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவன் வாழ்வில் முன்னேற வேண்டும் என அவனை சிறு வயதில் இருந்தே கஷ்டப்படுத்தி வளர்த்து வருகிறார் சமுத்திரகனி.
படித்து விட்டு என்ன ஆகப் போகிறோம் என தெரியாமலே பல மாணவர்கள் கல்லூரி படிப்பையே படித்து வரும் சமூக அவலத்தையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சரியான வழியை காட்ட மறுப்பதையும் டான் படத்தின் கதை தெளிவாக சொல்கிறது.
கண்டிப்பான ஆசிரியராக எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகளில் எல்லாம் சூப்பராக ஸ்கோர் செய்து விட்டு செல்கிறார். கல்லூரி போர்ஷனை விட பள்ளி போர்ஷனில் சிவகார்த்திகேயன் இன்னும் சிறப்பாக நடித்துள்ளார்.
கலகலப்பாக கேட் அண்ட் மவுஸ் கேமாக சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இடையே கல்லூரி போர்ஷன்கள் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அப்பா சமுத்திரகனியை பறிகொடுக்கும் இடத்தில் சிவகார்த்திகேயன் இன்னமும் நடிகராக மிளிர்கிறார்.
டான்ஸ் ஆட வருது, காமெடி பண்றாரு, நல்லாவும் நடித்து முன்னணி ஹீரோக்கள் எப்படி ஒட்டுமொத்த படத்தையும் தாங்குறாங்களோ அதே அளவுக்கு சிவகார்த்திகேயனும் கோலிவுட்டில் வளர்ந்து விட்டார் என்பதை தான் இந்த டான் உணர்த்துகிறது.
காப்பி அடித்து படம் பண்ணாலும் கரெக்ட்டாக படம் பண்ணி விடுவார் அட்லி என ஒரு யூடியூப் காமெடி வரும் அதுதான் இந்த படத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது. அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தியும் முதல் படம் பண்ணியிருக்கிறார் என சொல்லவே முடியாத அளவுக்கு சிறப்பான மேக்கிங்கை கொடுத்து ரசிகர்களை சந்தோஷமாக கதையை பற்றி யோசிக்கவிடாமல் 2 மணி நேரம் 45 நிமிட படத்தில் 2.30 மணி நேரம் கட்டிப் போட்டு விடுகிறார்.
இரண்டாம் பாதியில் வரும் சில தொய்வான காட்சிகளை தூக்கி இருந்தால் இன்னும் டான் பெரிய டானாக மாறி இருக்கும். சீமராஜா படத்தில் வைத்த அரைச்ச மாவை அரைச்சாலும் பாடல் வரிகளை டான் படத்தில் தாராளமாக வைத்திருக்கலாம்.
கெளதம் மேனன் பள்ளியில் சேர்வது, ஷார்ட் ஃபிலிம் எடுப்பது, அப்பாவை பற்றிய கதையை படமாக மாற்றுவது என இன்னொரு இன்ஜினியரிங் செட்டாகாத விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்தியாக தெரிகிறார் டான் சக்கரவர்த்தி! இந்த படத்துக்கு 5க்கு 3.75 மார்க் கொடுக்கலாம்!
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…