உங்களுக்கு நல்ல படம் வேணும்னா இத பண்ணாதீங்க!..ரசிகர்களிடம் கெஞ்சிய சிம்பு!..

by Rohini |
simbu_main_cine
X

ரசிகர்களின் மானசீக நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இப்பொழுது டிரெண்டிங்கான நடிகராக பேசப்பட்டு வருகிறார். இவருக்கு ஒரு நல்ல கம்பேக்காக அமைந்தது மாநாடு திரைப்படம். அந்த படத்தின் வெற்றி எங்கு பார்த்தாலும் சிம்பு சிம்பு என்று சொல்லுமளவுக்கு உயர்த்தியது.

simbu1_cine

இதனையடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. சிம்புவா இது என்று கேட்கும் அளவிற்கு அற்புதமாக நடித்திருந்தார். இவரின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் படம் பத்து தல.

இதையும் படிங்க : “கண்ணு தெரியாதவங்க மாதிரி நடிக்கனும்…” உண்மையாகவே தடுக்கி விழுந்த சீயான் விக்ரம்… டெடிகேஷன்னா இதுதான்!!

simbu2_cine

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு கிட்டத்தட்ட 50 நாள்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையுல் 50 வது நாளை நேற்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து கொண்டாடினர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு படத்தின் அனுபவங்களை பற்றி பேசினார்.

simbu3_cine

மேலும் ரசிகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் வைத்தார். எங்கு போனாலும் திரைக்கு வரக்கூடிய புதிய படத்தின் அப்டேட்களை பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இனிமேல் அப்படி எதும் கேட்க வேண்டாம். நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக உங்களுக்காக பண்ண தயாராக இருக்கிறோம். உங்களை சந்தோஷப்படுத்துவதே எங்களின் தலையாய நோக்கம். இனி இந்த மாதிரி செய்யாதீர்கள் என்று கூறினார்.

Next Story