இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க!.. ரஜினியிடம் எகிறிய டி.ஆர்... நடந்தது என்ன?..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும், டி.ராஜேந்தருக்கும் நடந்த லடாய் சம்பவம் ஒன்று அந்தக் காலத்தில் சுவாரசியமாக அரங்கேறியுள்ளது. இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
97, 98களில் நான் டி.ஆரிடம் வேலை பார்த்தேன். அப்போது அவருக்கு ரொம்ப மரியாதையும், முக்கியத்துவமும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உடனே டிஆர். தன் உதவியாளர் வி.கே.சுந்தரிடம் ரஜினிக்குப் போன போடுன்னு சொல்றார்.
அவரும் போன் செய்கிறார். அங்கு ரஜினியின் உதவியாளர் எடுக்கிறார். அந்த சமயத்தில் ரஜினிக்கு ரசிகர்கள் அடிக்கடி 'நான் தான் கமல் பேசுறேன். மோகன் பேசறேன்'னு போன் போடுவார்களாம். கடைசியில் ரஜினி பேசும்போது பார்த்தால் அவர் ஒரு ரசிகராக இருப்பாராம்.
இதைத் தடுக்க அவரது உதவியாளர் எதிர்முனையில் பேசுவது யார் என தெரிந்து கொண்டு தான் அதை உறுதி செய்த பின் போனை ரஜினியிடம் கொடுப்பாராம். அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இப்போதும் நடந்தது.
டிஆரின் உதவியாளர் பேசியதும் ரஜினியின் உதவியாளர் "இருங்க நான் மீண்டும் கூப்பிடுறேன்"னு சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாராம். திரும்ப அவர் அதே நம்பருக்குப் போன் செய்து நாங்க ஏவிஎம்ல இருந்து பேசறோம். "சரவணன் சார் டிஆரிடம் பேசணும்னு சொன்னாரு".
இதையும் படிங்க... விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ
போனைக் கொடுங்க என்று சொல்ல, அவரும் பேச ஆரம்பித்ததும் ரஜினியிடம் கொடுக்கிறார். ரஜினிக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் டி.ஆரிடம் பேசியிருக்கிறார். அப்போது டி.ஆர். சரவணன் தான் பேசறாருன்னு நினைச்சி, சார் சொல்லுங்க சார்னு சொன்னாராம். அப்புறம் டி.ஆர்.னு தெரிந்ததும் போனை ரஜினியிடம் கொடுக்க, நான் 'ரஜினி பேசறேன்'னு சொன்னாராம்.
அதற்கு டிஆர், கோபத்துடன்பொங்கி விட்டாராம். எதற்கு ஏவிஎம்னு சொல்லி ரஜினியிடம் கொடுக்கணும்னு அவருக்கு கோபம் வந்துவிட்டதாம். "ரஜினி எனக்கு இந்த வேலை எல்லாம் பிடிக்காது. ஏன் ஏவிஎம்னு சொன்னீங்க. இந்த வேலை எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க ரஜினி... ஏவிஎம்ல இருந்து பேசறதா ஏன் சொன்னீங்க..." ன்னு கேட்டுள்ளார். ரஜினியும் இதை சற்றும் எதிர்பார்க்காமல் சாரின்னு சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க... மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த கதாநாயகிகள்!… யார் யார்னு தெரியுமா?
உடனே போனை வைங்கனு வைத்து விட்டாராம் டிஆர். அதன்பிறகு 4 முறை ரஜினியிடம் இருந்து போன் வந்தும் எடுக்கவே இல்லையாம். அதன்பிறகு கோபம் தணிந்ததும் போனை எடுக்க ரஜினியும் என்ன நடந்ததுன்னு கேட்டுள்ளார். அதன்பிறகு இல்ல... உங்களுக்கு உடல்நிலை சரியில்லன்னு சொன்னாங்க. அதான் போன் பண்ணினேன் என்று பேசப் பேச இருவரும் கூலாகி விட்டார்களாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.