Connect with us

Cinema News

இந்த 21 ‘இந்திய’ படங்களையும்… நிச்சயம் நீங்க ‘மிஸ்’ பண்ணாம பாக்கணும்!

ஓடிடி வருகைக்கு பிறகு எங்கேயும் எப்போதும் படங்களை பார்த்து ரசிக்கும் வசதி நமக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக மொழி, நாடு, கண்டம் தாண்டியும் படங்களை கண்டு ரசிக்கும் அளவிற்கு உலகம் உள்ளங்கைக்குள் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், ஜீ தமிழ், ஆஹா உள்ளிட்ட ஓடிடி பிளாட்பார்ம்கள் உள்ளன. இதில் குறிப்பாக அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன.

சினிமாவை பொறுத்தவரை 9௦ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ், மில்லினியம் கிட்ஸ் என அனைத்து கிட்ஸ்களையும் கவரும் வகையில் பல்வேறு ஜானர்களில் படங்கள், சீரிஸ்கள் நிறைந்து கிடக்கின்றன. காணக் கண் கோடி வேண்டும் என்பது போல பார்ப்பதற்கு நமக்கு நேரம் தான் வேண்டும்.

அந்தவகையில் இந்திய சினிமாவில் ரசிகர்கள் தவறவிடக் கூடாத 21 படங்கள் குறித்து இங்கே நாம் பார்க்கலாம். இவை அனைத்தும் நெட்பிளிக்ஸ் தளத்தில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1. Nayattu

ஊழல் அதிகாரிகளின் கையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் 3 போலீஸ் அதிகாரிகள் குறித்த கதை இது. முக்கிய வேடங்களில் குஞ்சாக்கோ போபன், ஜியோ ஜார்ஜ், நிமிஷா சஜயன் நடித்துள்ள இப்படம் 2௦21-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. காவல்துறையில் உள்ளவர்கள் காவல்துறையாலே வேட்டையாடப்படுவதன் அவலங்களை இப்படம் எடுத்துக் காட்டியது.

2. Iratta

இரட்டை வேடங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வெளியான இப்படம் கிரைம் திரில்லர் அடிப்படையிலானது. காவல் துறையில் வேலை பார்க்கும் அண்ணன்-தம்பி அதில் ஒருவர் இறந்து போக, கொலைக்கு பின்னிருக்கும் காரணத்தை மற்றொருவர் கண்டறிந்தாரா? இல்லையா? என்பதை சொல்வதே இப்படத்தின் கதையாகும். கடந்த 2௦23-ம் ஆண்டு இப்படம் மலையாளத்தில் வெளியானது.

3. Karthik Calling Karthik

தனது முதலாளியால் கிண்டல் செய்யப்படும் கார்த்திக் என்னும் அமைதியான இளைஞருக்கு ஒரு அந்நிய எண்ணில் இருந்து ஒருநாள் கால் வருகிறது. அதற்குப்பின் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் கதை. 2௦1௦-ம் ஆண்டு வெளியான இப்படம் இன்னும் கூட அதன் கதைக்காக பாராட்டப்படுகிறது.

4. Anweshippin Kandethum

தீர்க்கப்படாத இரண்டு வழக்குகளை ஒரு சப் இன்ஸ்பெக்டர் பல்வேறு தடைகளையும் மீறி எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. வழக்கம்போல டொவினோ தாமஸ் இப்படத்தில் மிரட்டி இருப்பார். இப்படம் கடந்த 2௦23-ம் ஆண்டு வெளியானது.

5. That Girl in Yellow Boots

காணாமல் போன தனது தந்தையை தேடி இந்தியா வரும் ஒரு இங்கிலாந்து பெண் தன்னுடைய தந்தையை கண்டறிவது தான் படத்தின் கதை. இங்கு அவர் சந்திக்கும் கலாச்சார சிக்கல்கள் மற்றும் சிலபல மர்மங்கள் ஆகியவற்றை சுற்றி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படம் கடந்த 2௦19-ம் ஆண்டு வெளியானது.

6.Shaitan

எந்நேரமும் குடி, போதை, பெண்கள் என வாழ்க்கையை அனுபவிக்கும் இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக ஒருநாள் சாலை விபத்தில் சிக்குகின்றனர். அதற்குப்பிறகு அவர்களின் வாழ்க்கை என்னவானது என்பது தான் இப்படத்தின் கதையாகும். 2௦11-ம் ஆண்டு இப்படம் இந்தியில் வெளியானது.

7. 7 Khoon Maaf

நாம் பார்க்கப்போகும் இந்த 7-வது படத்தின் தலைப்பும் 7 என்று தான் ஆரம்பிக்கிறது. காதலித்து திருமணம் செய்யும் நாயகி தன்னுடைய கணவர்களை வரிசையாக கொலை செய்கிறார். அதன் பின்னணி என்ன? என்பது குறித்து கூறுவது இதன் கதையாகும். பிரியங்கா சோப்ரா நாயகியாக நடித்திருக்கும் இப்படம் கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியில் வெளியானது.

8. Kaminey

பேச்சுக்குறைபாடுள்ள இரட்டையர்கள் தவறாக ஒரு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை கூறுவது தான் காமினி படத்தின் கதை. ஷாகித் கபூர், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது.

9. Talaash

ஒரு நடிகரின் மர்ம மரணத்தை காவல்துறை அதிகாரி எப்படி கண்டறிகிறார் என்பது தான் தலாஷ் படத்தின் கதையாகும். கடந்த 2௦12-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அமீர்கான், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1௦. Super Deluxe

ஒரே நாளில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் கதை. தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2௦19-ம் ஆண்டு படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

11. Visaranai

வெற்றிமாறன் இயக்கத்தில் நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்பட்ட விசாரணை கடந்த 2௦15-ம் ஆண்டு வெளியானது. காவல்துறையின் அடாவடியில் சிக்கி வாழ்விழக்கும் நான்கு இளைஞர்களின் கதை தான் இப்படத்தின் திரைக்கதையாகும்.

12. Padavettu

கிராமத்தை சேர்ந்த சோம்பேறி இளைஞன் ஒருவன் எப்படி விவசாய நிலங்களை அபகரிக்க திட்டமிடும், அரசியல் கொடுமைக்காரர்களுக்கு எதிராக போராடுகிறான் என்பது தான் இந்த படவேட்டு படத்தின் கதை ஆகும். இதில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

13. Aithe

உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பரப்ப விரும்பும் ஒரு கேங்ஸ்டர் நான்கு இளைஞர்களை பயன்படுத்தி ஒரு விமானத்தை கடத்துகிறார். அதன் பின் என்ன நடந்தது? என்பதை சொல்வது தான் ஐதே படத்தின் கதையாகும். சிந்து துலானி முக்கிய வேடத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த 2௦௦3-ம் ஆண்டு தெலுங்கில் வெளியானது.

14. Vath

கடனால் சூழப்பட்ட ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் தான் இந்த வாத் படத்தின் கதையாகும். கடந்த 2௦௦2-ம் ஆண்டு இப்படம் இந்தியில் வெளியானது.

15. A Wednesday

சாதாரண மனிதர் ஒருவர் மும்பை சிட்டி முழுவதும் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாரை மிரட்டுகிறார். அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்? இதன் பின்னணி என்ன? என்று சொல்வது தான் ஏ வெட்னஸ்டே படத்தின் கதையாகும். நசுருதீன் ஷா, அனுபம் கெர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் கடந்த 2008-ம் ஆண்டு இந்தியில் வெளியானது.

16. No One Killed Jessica

ஒரு செல்வாக்கு மிக்க அரசியல்வாதியால் கொலை செய்யப்படும் ஜெஸிகா என்னும் பெண்ணிற்கு அவரின் சகோதரி நீதி தேடிக் கொடுத்தாரா? என்பது தான் நோ ஒன் கில்டு ஜெஸிகா படத்தின் கதையாகும். 2௦11-ம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படத்தில் வித்யா பாலன், ராணி முகர்ஜி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

17. Talvar

2௦௦8-ம் ஆண்டு நொய்டாவில் நடந்த இரட்டைக்கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தல்வார் படம் 2௦15-ம் ஆண்டு இந்தியில் வெளியானது. இர்பான் கான், கொங்கனா சென் சர்மா இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

18. Uma Maheswara Ugra Roopasya

மென்மையான புகைப்படக் கலைஞரான உமா மகேஸ்வரா ஒரு பொது இடத்தில் வைத்து அடிக்கப்படுகிறார். இதனால் அவமானப்படும் அவர் இதற்காக பழிவாங்க தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? என்பது தான் உமா மகேஸ்வரா உக்ரா ரூபாஸ்யா படத்தின் கதையாகும். கடந்த 2௦2௦-ம் ஆண்டு இப்படம் தெலுங்கில் வெளியானது.

19. Merry Christmas

கிறிஸ்துமஸ் மாலையில் சந்திக்கும் இரண்டு அந்நியர்கள் இரவில் ஒன்றாக தங்குகின்றனர். ரொமான்ஸில் தொடங்கும் அந்த இரவு கொலையில் முடிகிறது. அதன்பிறகு என்னவானது என்பது தான் மேரி கிறிஸ்துமஸ் படத்தின் கதையாகும். இந்தாண்டு துவக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தமிழ், இந்தியில் படம் வெளியானது.

2௦. Article 15

கூலி உயர்வு கேட்கும் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் இடப்படுகின்றனர். அதில் ஒரு சிறுமி மிஸ் ஆகிறார். அதன்பின் என்னவானது என்பது தான் இந்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் கதையாகும். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2௦19-ம் ஆண்டு இந்தியில் வெளியான இப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் ஆனது.

21. Oththa Seruppu Size 7

பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்து வெளியான படம் தான் இந்த ஒத்த செருப்பு. பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆன இப்படம் கடந்த 2௦19-ம் ஆண்டு வெளியானது. தன்னுடைய திரைவாழ்வில் ஏகப்பட்ட புதுமைகளை செய்திருக்கும் பார்த்திபன் இப்படத்திலும் புதுமை காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top