Connect with us

Cinema News

லோகேஷ் வேண்டாம்.. டான் பக்கம் சாய்ந்த தளபதி விஜய்.?! சிபி செய்த வேலையால் பதறும் ரசிகர்கள்..

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கேள்வியாக எழும்பியுள்ளது.

அந்த வகையில், கடந்த சில மதங்களாகவே விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், அந்த படம் முழுக்க முழுக்க அதிரடி கேங் ஸ்டார் படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையும் படியுங்களேன்- உன் தோளில் சாய இடம் கொடு… நயன்தாராவிடம் குழந்தை போல கொஞ்சும் விக்கி.. வைரலாகும் ரொமான்டிக் கிளிக்ஸ்.

இதனால், லோகேஷ் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இல்லை வேறு யாரும் இயக்குறார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில், தற்போது ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஒரு தகவல் பரவி வருகிறது.

அது என்னவென்றால், அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சிவகார்திகேயனை வைத்து டான் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தி விஜயிடம் அற்புதமான கதையின் ஒன் லைனை கூறியுள்ளாராம். அது விஜய்க்கு பிடித்து போக, அந்த கதையை மேம்படுத்த சொல்லிவிட்டராம்.

எனவே, சிபியும் அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறாராம். டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபி இயக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை, ஒரு வேலை விஜயின் அடுத்த படத்தை இவர் தான் இயக்குகிறாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. மேலும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்குவார் என காத்திருந்த ரசிகர்கள் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top