Connect with us

Cinema News

கௌதம் மேனன் எப்படி சார்… யோஹன் திரைப்படம் நடக்காமல் போனதுக்கு இது தான் காரணமா..?

Gautham Menon: விஜயின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மிஸ்ஸான முக்கியமான திரைப்படம் யோஹன் அத்தியாயம் ஒன்று தான். இந்தப் படம் கைவிட்டு போனதற்கும், அதில் என்னென்ன சுவாரஸ்யம் நடந்தது என்பது குறித்தும் ஒளிப்பதிவாளர் மனோஜ் தெரிவித்து இருக்கிறார்.

லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் சமீபத்திய பேட்டியில் யோஹான் அத்தியாயம் ஒன்று குறித்து தெரிவித்து இருக்கிறார். அதில், நண்பன் திரைப்படத்தின் அஸ்க லஸ்கா பாடல் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது இன்னொரு லோகேஷனுக்கு போய் கொண்டு இருந்தோம்.

இதையும் வாசிங்க:இனி ரஜினியுடன் இணைய வேண்டாம்.. கமல் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு முடிவு இருக்கிறதாம்..!

பின்னாடி இருந்து ஒரு குரல், கௌதம் மேனன் ஒருத்தர் இருக்காரே எப்படி சார் என விஜய் சார் கேட்டார். நான் அவர் ரொம்பவே நல்ல இயக்குனர் சார். வித்தியாசமாக திரைக்கதை எழுதுவார். நமக்கு தேவையானவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப எடுத்து விடுவார் என்றேன்.

இதையடுத்து எனக்கு விஜய்சார் கால் செய்தார். அவர் சொல்லும் கதை செமையாக இருக்கு சார். ஆனால் சுத்தமாக தமிழ் வாக்கியங்களே இல்லை. மொத்தமாக இங்கிலிஷிலே பேசுவது போல அமைத்து இருக்கிறார். மைண்ட் வாய்ஸில் மட்டுமே தமிழ் இருக்கும். இந்த கதை எனக்கு செட்டாகுமா என பயமாக இருக்கிறது என்றார்.

நானும் கௌதமுக்கு கால் செய்து என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்றார். நானா ப்ளான் பண்ணலைடா. எழுதிட்டேன் என்றார். இதையடுத்து அந்த கதை கிளம்பவே இல்லாமல் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட இதுப்போலவே தான் துருவ நட்சத்திரம் கதையும் இருக்கும். 

இதையும் வாசிங்க: வடிவேலு தூக்கியெறிந்த காமெடி நடிகர்… சரியான அங்கீகாரத்தை கொடுத்து உதவிய மணிவண்ணன்…

மூன்று கதையாக அமைந்த கதை. ஸ்பை த்ரில்லரில் அந்த கதை அச்சமயத்தில் நடந்தது இருந்தால் சரியாக இருக்கும். இப்போ இந்த கூட்டணியே அமைத்தாலும் படத்தினை சரியாக எடுத்து போக முடியாது எனப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top