நம்பவே முடியலயே!... டபுள் ஆக்டிங் ரோலில் நடித்து அசத்திய நடிகர்கள்...
தமிழ் சினிமாவில் சிவாஜி , எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடிகர்கள் , நடிகைகள் இரட்டை வேடங்களில் நடித்தி பல படங்களை கொடுத்திருக்கின்றனர். இரட்டை வேட கதாபாத்திரம் ஒன்று அப்பா-மகன் கேரக்டரில் அமைந்ததாக இருக்கலாம், அல்லது ஹீரோ-வில்லன் கதாபாத்திரத்தில் அமைந்ததாக இருக்கலாம், அல்லது அண்ணன் - தம்பி கதாபாத்திரமாக கூட இருக்கலாம்.
இப்படி பல வேறுபட்ட கோணத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தாலும் தற்போதுள்ள நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடித்து அதுவும் குறிப்பாக அண்ணன் - தம்பி கதாபாத்திரத்தில் நடித்து உண்மையாகவே இவர்கள் இரட்டையர்களாகவே பிறந்திருக்கலாம்பா என சொல்லும் அளவிற்கு நடித்து அசத்திய நடிகர்களின் பட்டியலைத்தான் பார்க்க இருக்கிறோம்.
நடிகர் பிரசாந்த் : பொதுவாகவே 80க்கு அப்புறம் இரட்டை வேடத்தில் நடிக்கக் கூடிய கதாபாத்திரம் என்றால் முதலில் நம் நியாபகத்திற்கு வருவது பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘ஜீன்ஸ்’ படம். அந்தப் படம் வெளியாகி ஒரு புதுவித உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு மிகவும் தத்ரூபமாக காட்சிகளை படமாக்கியிருப்பார் இயக்குனர் சங்கர். அதுமட்டுமில்லாமல் அண்ணன் - தம்பி கேரக்டரில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பிரசாந்த் தன்னுடைய கதாபாத்திரத்தை அழகாக கொண்டு போயிருப்பார்.
நடிகர் அஜித் : அஜித் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘வாலி’. நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பாசமுள்ள அண்ணனாகவும் அதே நேரத்தில் தனது வில்லத்தனத்தையும் அழகாக சித்தரித்து காட்டியிருப்பார். ஹீரோயினை பார்ப்பதற்கு முன்பு வரை ஒரு அண்ணனாக பாசத்தையும் நேசத்தையும் காட்டும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். உண்மையிலேயே இவர்களும் இரட்டையர்களாகவே இருந்திருக்கலாம் என எண்ண தோன்றிய படம்.
நடிகர் தனுஷ் : தனுஷின் நடிப்பில் அதுவும் இரட்டை கதாபாத்திரத்தில் வெளியான படம் ‘கொடி’. இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை சகோதரர்களாக நடித்து அசத்தியிருப்பார். காட்சிகளில் இரு கதாபாத்திரமும் அந்த அளவுக்கு ஒட்ட வில்லை என்றாலும் அண்ணன் மரணத்திற்கு பிறகு இரட்டையர்களில் ஒருவர் இறந்தால் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அழகாக காட்டியிருப்பார்கள்.
நடிகர் சிம்பு : சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து கலக்கிய படம் ‘மன்மதன்’. இந்த படத்திற்கு கதை எழுதியது சிம்பு தான். இந்தப் படத்தில் சிம்பு இரட்டை சகோதரர்களாக நடித்திருப்பார். ஒரு கதாபாத்திரம் மங்குனியான கேரக்டரிலும் இன்னொரு கதாபாத்திரம் துருதுருவென இருக்கும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். காதலியால் ஏமாற்றப்பட்ட ஒரு சிம்பு காதலியை கொன்றதோடு மட்டுமில்லாமல் ஆண்களை ஏமாற்றும் பெண்களையும் கடத்தி கொலை செய்யும் கதாபாத்திரமாக மாறுகிறார். அதற்கு இன்னொரு சிம்பு உதவுகிற மாதிரி கதையை நகர்த்தியிருப்பார்கள். இந்தப் படமும் இரட்டையர்களுக்குள் இருக்கிற ஒரு வித பாசத்தை வெளிப்படுத்தும் படமாகவே அமைந்திருக்கும்.
இதையும் படிங்க : ‘பிகில்’ ராயப்பன் கேரக்டருக்கு முதலில் நடிக்க இருந்தவர்?.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை!..