நான் லேடி சூப்பர்ஸ்டாரெல்லாம் இல்ல!... அப்போ புரியல.. அம்மணி சொன்னதுக்கு இப்போ புரியுது…

by Akhilan |
நான் லேடி சூப்பர்ஸ்டாரெல்லாம் இல்ல!... அப்போ புரியல.. அம்மணி சொன்னதுக்கு இப்போ புரியுது…
X

Nayanthara: தமிழ் சினிமாவில் நடிகை தனிக்கதையில் நடித்தால் படம் ஓடுமா என்ற சந்தேகத்தினை அனுஷ்காவுக்கு பின்னர் தொடர்ச்சியாக உடைத்தவர் நயன்தாரா தான். பிரம்மாண்ட படைப்பில்லாமல் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்தும் ஹிட்டும் கொடுத்தார்.

இதனால் ரசிகர்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்தனர். சமீபத்தில் பேட்டியில் நயன் அப்படி கூப்பிடாதீங்க என தன்மையாக சொல்லி இருந்தார். ஆனால் பின்னாடி ஒரு உள்குத்து இருப்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: தன்னிடம் வேலை செய்தவரை விரும்பிய மகள்!.. ஏ.ஆர்.ரகுமான் என்ன செய்தார் தெரியுமா?

நயனின் நடிப்பில் வெளிவந்த சமீபத்திய 11 படங்களும் தோல்வியாக அமைந்தது. இது ஒரு புறம் என்றால் பிசினஸ் செய்கிறேன் என்ற பெயரில் வாழ்க்கையிலே அவர் தான் முதல் முறையாக அவர் கொடுக்கும் பில்டப் வேறு உச்சத்தில் செல்கிறது. அது ஒரு தனிக்கதை தான். இதில், 12வது படமான அன்னப்பூரணி நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் இருந்த சர்ச்சையான வசனத்தால் படக்குழு மீது மும்பையில் ஒரு வழக்கு போட்டு இருக்கிறது. இது நயனுக்கும் அதிர்ச்சியாகி விட்டது. தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஜீ தமிழ் படத்தினை நெட்பிளிக்ஸில் இருந்து எடுத்து படத்தில் இருந்த வசனத்தை நீக்குகிறோம் என அறிவித்தனர்.

இதையும் படிங்க: ரீ எண்ட்ரி கொடுத்து அசிங்கப்படும் விக்ரம்!… நெட்டிசன் தாண்டி தங்கச்சியும் கழுவி ஊத்துறாங்களே!..

தியேட்டரில் தப்புத்தாலும் ஓடிடியில் வெளியாகி எளிதாக பிரச்னையில் சிக்கிவிட்டது. இதனால் ஓடிடி நிறுவனம் இனி சின்ன பட்ஜெட் படங்களை தைரியமாக வாங்குமா? நாளை நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு சென்சார் டீமை உருவாக்கும் நிலைக்கு அன்னப்பூரணியே கொண்டு வந்துவிட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

Next Story