வந்தாரு தங்க பரிசு வாங்குனாரு போனாரு.! Dr.சிம்பு-னா சும்மாவா.?!
நடிகர் சிலம்பரசன் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வந்த திரைப்படங்கள் நடித்து முடித்த திரைப்படம் அப்டேட்டுகள் குவிந்து வந்தது.
சிம்பு தனது பிறந்தநாளை இந்தியாவில் கொண்டாடவில்லை. அவர் துபாய் சென்றுள்ளார். துபாயில் தனது நண்பர்களுடன் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடியுள்ளார்.
அண்மையில், வேல்ஸ் கல்வி நிறுவனம் சிலம்பரசனுக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதாக டாக்டர் பட்டம் கொடுத்து அவரை கௌரவித்தது.
இதையும் படியுங்களேன்- என் அண்ணன் மட்டும் தான் என்ன வச்சி படம் எடுப்பான்.! தம்பி மேல் பாசம் அதிகம்.!
தற்போது, அதனைத் தொடர்ந்து துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது. இந்த கோல்டன் விசா மூலம் சிலம்பரசன் துபாய் நாட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் தங்குதடையின்றி சென்று வரலாம். இந்த கோல்டன் விசாவை தமிழ்சினிமாவில் வெகு சிலரே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.