Pradeep: சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திய ‘லவ் டுடே’ நாயகன்… இதத்தான் நேரம்னு சொல்றது! ..

Published on: November 10, 2024
---Advertisement---

கோலிவுட்டின் இளம் ஹீரோ ஒருவர் தன்னுடைய சம்பளத்தினை, ஒரேயடியாக உயர்த்தி இருக்கிறார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

Love today pradeep: கோமாளி படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். யாரும் எதிர்பாராத வகையில் லவ் டுடே என, விஜய் படத்தின் தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் ஹீரோவாக நடித்தார். உச்ச ஹீரோக்களை நம்பி மோசம்போன ஏஜிஎஸ் பிரதீப் படத்தால் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தது.

இதையும் படிங்க: Nepoleon: ஆறு மாதம் கழித்து தனுஷுக்கு ‘மீண்டும்’ திருமணம்?

அந்த படத்தில் நடிக்கும்போது பிரதீப்பிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.70 லட்சம் படம் வெளியான பின்னர் அதாவது மாபெரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் போனால் போகிறது என்று, ரூ.80 லட்சம் அவருக்கு கொடுத்தனர். மொத்தமாக லவ் டுடே படத்திற்கு பிரதீப் பெற்ற சம்பளம் ரூ.1.50 கோடி ஆகும்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ரவுடி பிக்சர்ஸ் கூட்டணியில் தயாரிக்கிறது.

Love Today
Love Today

டிராகன் படத்தினை தயாரிப்பது அதே ஏஜிஎஸ் தான். கோட் கொடுத்த அடியால் மீண்டும் பிரதீப் பக்கம் வந்திருக்கின்றனர். இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடிக்க ரூ.17 கோடியை பிரதீப் சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். படங்களுக்கு மினிமம் கேரண்டி, இளசுகளின் பேவரைட் நாயகன் என்பதால் பிரதீப் சம்பளத்தை மேலும் உயர்த்தினாலும் கொடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக இருக்கின்றன.

தமிழில் மட்டுமல்லாமல் லவ் டுடே படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இனிமேல் பிரதீப் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படும் என்பதால்தான் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: Kollywood: இந்த வருஷம் வெளியான படத்தில் அதிக வசூல்!.. விஜய் கூட லிஸ்ட்டில் இல்லையே!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.