டிராகன் டீமுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த தளபதி விஜய்!... அஸ்வத் மாரிமுத்து அழாத குறைதான்!..

aswath
பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் டிராகன். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தோடு மோதிய டிராகன் தியேட்டரில் பட்டையை கிளப்பியது. இன்று வரை படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். கல்லூரியில் நடக்கும் கதை. பள்ளியில் முதலிடத்தில் வரும் மாணவன் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக கல்லூரியில் தேவையில்லாத வேலைகளை செய்து மாஸ் என்கிற பெயரில் அடாவடி செய்யும் கேரக்டர் பிரதீப் ரங்க நாதனின் டிராகன் கேரக்டர்.

dragon3
இப்படியே கல்லூரி படிப்பை முடிக்க மொத்தமாக அரியருடன் வெளியே வருகிறார். அதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகிறார். ஒரு கட்டத்தில் காதலித்த பெண்ணே அவனை விட்டு பிரிகிறாள். எப்படியாவது காதலி மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என நினைத்து மேலும் ஃபிராடு வேலைத்தனம் செய்து ஒரு நல்ல ஐடி கம்பெனியில் இணைகிறான். அங்கு வேலையில் கவனம் செலுத்தினாலும் ஒரு கட்டத்தில் கல்லூரி பிரின்சிபல் மூலமாக இவனுடைய வில்லத்தனம் தெரியவருகிறது.

dragon2
உன்னுடைய வில்லத்தனத்தை உன் மேனேஜரிடம் சொல்ல வேண்டாம் என்றால் மறுபடியும் கல்லூரியில் சேர்ந்து எல்லா அரியரையும் கிளியர் செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறார் அந்த பிரின்சிபலான மிஷ்கின். இப்படித்தான் கதை நகர்ந்து கொண்டே போக அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்துகிறது. நல்ல ஸ்கிரீன்ப்ளேவுடன் படம் சுவாரஸ்யமாக போகிறது.

dragon1
கடைசியில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படம் நமக்கு உணர்த்துகிறது. இந்த நிலையில் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். வாழ்த்து மழையில் ஒட்டுமொத்த படக்குழுவும் நனைய இன்று படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். டிராகன் படக்குழு விஜயை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருக்கின்றனர்.
அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரெங்க நாதன், அஸ்வத் மாரிமுத்து என விஜயை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதில் அஸ்வத் மாரிமுத்து அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு எதிரே அமர்ந்து அவரை பார்த்தேன். அதிகமாக பேசக் கூடிய நான் அவரை பார்த்ததும் பேச வாய் வரவில்லை. கண்களில் கண்ணீர்தான் வந்தது. இருந்தாலும் விஜய் GREAT WRITING BRO’ என்று கூறியது ஒன்றே போதும் என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டிருக்கிறார்.