Connect with us
Vaali

Cinema History

“வாலி ஒழிக”… போர் கொடி தூக்கிய பெரியாரிய போராளிகள்… ரஜினி பட பாடலால் வெடித்த சர்ச்சை…

கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாபா”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் படு தோல்வி அடைந்தது. “ரஜினியின் கேரியரே குளோஸ், இனிமே ரஜினி அவ்வளவுதான்” போன்ற விமர்சனங்கள் எழ தொடங்கின. எனினும் “பாபா” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடித்த “சந்திரமுகி” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Baba

Baba

இதனை தொடர்ந்து “பாபா” திரைப்படத்தை கடந்த 10 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்தனர் படக்குழுவினர். மீண்டும் ரீ-ரிலீஸ் செய்தால் படம் நல்ல வரவேற்பை பெறும் என கூறபட்டது. எனினும் மிகப்பெரிய வெற்றி என கூறமுடியாது என்றாலும் ரீ-ரிலிஸில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.

“பாபா” திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. “திப்பு குமரி”, “மாயா மாயா”, “பாபா கிச்சு கிச்சு தா”, “சக்தி கொடு”, “ராஜ்யமா” போன்ற அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாக இருந்தன.

Baba

Baba

“பாபா” திரைப்படத்தின் தொடக்கத்தில் நாத்திகராக இருக்கும் ரஜினிகாந்த், ஆத்திகராக மாறும் தருணத்தில் இடம்பெற்ற பாடல் “ராஜ்யமா இல்லை இமயமா” என்ற பாடல். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.

இந்த பாடலில் இடம்பெற்ற  “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி” என்ற வரிகள் மிகவும் பிரபலமான வரிகள் ஆகும். இந்த நிலையில் இந்த வரிகள் அக்காலகட்டத்தில் பெரும் சர்ச்சையை உண்டு செய்ததாம்.

Vaali

Vaali

அதாவது “பாபா” படத்தின் பாடல்கள் வெளிவந்திருந்த நிலையில் ஒரு நாள் வாலி காரில் சென்றுகொண்டிருந்தபோது, பல பேருந்துகளில் “வாலி ஒழிக”, “வாலி ஒழிக” போன்ற வாசகங்கள் எழுதியிருந்ததை பார்த்தாராம். எதற்காக இப்படி எழுதியிருக்கிறார்கள் என வாலிக்கு பிடிபடவில்லையாம். அதன் பின் வீட்டிற்குச் சென்றபோது அவரது மனைவி ஓடிவந்து “தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நிறைய பேர் திட்டுகிறார்கள்” என கூறினாராம்.

அதன் பிறகுதான் வாலிக்கு விஷயமே புரிய வந்ததாம். திராவிடர் கழகத்தின் தலைவரான கி.வீரமணி, பாபா படத்தில் பெரியாரை அவமரியாதை படுத்தியதாக ரஜினி மற்றும் வாலியின் மீது வழக்குத் தொடுத்தாராம். மேலும் வாலி, ரஜினிகாந்த் ஆகியோரின் வீட்டிற்கு முன் மரியல் போராட்டம் செய்யவுள்ளதாகவும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆட்கள் திட்டம் போட்டனராம்.

இதையும் படிங்க: இந்த படத்தை போய் பிடிக்கலைன்னு சொல்லிருக்காரே… இளையராஜா வெறித்தனமாக இசையமைத்த ஹிட் படத்தின் பின்னணி!!

Periyar and K Veeramani

Periyar and K Veeramani

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த்தும் வாலியும் கி.வீரமணியை தொடர்புகொண்டு “இது அந்த கதைக்காக எழுதியது.பெரியாரை அவமானப்படுத்தும்படியாக எழுதவில்லை” என கூறி அவரை சமாதானப்படுத்தினார்களாம். அதன் பிறகுதான் கி.வீரமணி வழக்கை கைவிட்டாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top