Connect with us

பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த மனைவி… சினிமா எடுக்க கதை யோசித்த இயக்குனர்… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!!

Driver Jamuna

Cinema News

பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த மனைவி… சினிமா எடுக்க கதை யோசித்த இயக்குனர்… உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா!!

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜோதிகா, நயன்தாரா ஆகியோருக்குப் பிறகு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

Aishwarya Rajesh

Aishwarya Rajesh

“மோ”, “கனா”, “பூமிகா” போன்ற பல திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது “டிரைவர் ஜமுனா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இத்திரைப்படத்தை கின்ஸ்லின் இயக்கியுள்ளார். கின்ஸ்லின் இதற்கு முன் “வத்திக்குச்சி” என்ற திரைப்படத்தை இயக்கியவர்.

Driver Jamuna

Driver Jamuna

“டிரைவர் ஜமுனா” திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷும்,  “டிரைவர் ஜமுனா” திரைப்படத்தின் இயக்குனர் கின்ஸ்லினும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டனர். அப்போது இத்திரைப்படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து இயக்குனர் கின்ஸ்லின் பகிர்ந்துகொண்டார்.

இதையும் படிங்க: “ஷங்கருக்கு வேள்பாரியை அறிமுகப்படுத்திய லிங்குசாமி??…” ஆனா உண்மை என்னன்னு தெரியுமா??

Kinslin

Kinslin

“என்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவரை அடிக்கடி டாக்சியில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வேன். அப்படி ஒரு முறை பிரசவத்திற்காக அழைத்துச் சென்றபோதுதான் டாக்சி டிரைவரை ஹீரோ கதாப்பாத்திரமாக வைத்து ஒரு கதை எழுதினால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். அருகில் என் மனைவி பிரசவ வலியில் இருக்கும்போது அவரிடம் நான் ஐடியா ஒன்று யோசித்திருக்கிறேன், சொல்லட்டா?? என்று இந்த கதையை அவரிடம் கூறினேன்” என்று நகைச்சுவையுடன் கூறினார்.

Driver Jamuna

Driver Jamuna

மேலும் பேசிய அவர் “இந்த கதையில் ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்காது என தோன்றியது. அதனால் ஒரு பெண்ணை கார் டிரைவராக காட்டினால் எப்படி இருக்கும் என யோசித்தேன். அது சுவாரசியமாக இருந்தது. இப்படித்தான் இந்த கதை உருவானது” என கின்ஸ்லின் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top