மாநாடு-2 ரெடி.! தேதி பின்னர் அறிவிக்கபடும்.! தெறிக்கும் அப்டேட்.!

by Manikandan |
மாநாடு-2 ரெடி.! தேதி பின்னர் அறிவிக்கபடும்.! தெறிக்கும் அப்டேட்.!
X

மாநாடு திரைப்படத்தின் மிக பெரிய வெற்றி சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு சென்றது என்றே கூறலாம். இயக்குனர் வெங்கட் பிரபு, அஜித்திற்கு ஒரு மங்காத்தா கொடுத்தது போல, சிம்புக்கு மாநாடு திரைப்படத்தை கொடுத்து அவரை மீண்டும் ரேஸில் ஓட வைத்துள்ளார்.

அதனை பிடித்துக்கொண்ட சிம்பு தற்போது வேகமாக ரேஸில் ஓடி கொண்டிருக்கிறார். வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல என பறந்து பறந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்டும் வருகிறார். அதில் ஒரு கதை தான் மலையாள படமான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் தமிழ் ரீமேக். இந்த தமிழ் ரீமேக் மூலம் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் தமிழில் தயாரிப்பாளராக களமிறங்குகிறார்.

இதையும் படையுங்கள் - அவர்கிட்ட கொடுக்காதீங்க சிம்புவை கெஞ்சும் ரசிகர்கள்..!

டிரைவிங் லைசன்ஸ் படத்தில் பிரிதிவிராஜ், சுராஜ் நடித்திருப்பர். இருவருக்கும் இணையான கதாபாத்திரம். தற்போது அதே போல, தமிழில் பிரிதிவிராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவையும், சுராஜ் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். இந்த பேச்சு வார்த்தை கிட்டத்தட்ட முடிந்து ஓகே ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக மாநாடு படத்தின் பார்ட் 2 வசூல் போல படம் பெரிய ஹிட்டாகும். படத்தின் அறிவிப்பு வெளியாக எப்படியும் குறைந்தது ஒரு வருடம் ஆகும் என கூறப்படுகிறது. சிம்புவின் கைவச படங்களை முடித்த பின்னர் தான் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story