வெறும் காமெடியன்னு நினைச்சீங்களா…? டிஎஸ்.பாலையா பற்றி யாரும் அறியாத தகவல்கள்… பகிர்ந்த பிரபலம்!
டிஎஸ்.பாலையா என்றதும் நமக்கு அவர் நல்ல காமெடி ஆக்டர் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் அதற்கும் மேல என்பது இப்போது தான் தெரிகிறது. அவரைப் பற்றி அறியாத பல தகவல்களைச் சொல்கிறார் இந்த பிரபலம். வாங்க பார்க்கலாம். தனது அற்புதமான நடிப்பாற்றலால் ரசிகர்களுடைய உள்ளங்களைக் கவர்ந்த டிஎஸ்.பாலையா எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் தான் அவரோடு சேர்ந்து அறிமுகம் ஆனார். அந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் திறமை காட்டிய […]

டிஎஸ்.பாலையா என்றதும் நமக்கு அவர் நல்ல காமெடி ஆக்டர் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் அதற்கும் மேல என்பது இப்போது தான் தெரிகிறது. அவரைப் பற்றி அறியாத பல தகவல்களைச் சொல்கிறார் இந்த பிரபலம். வாங்க பார்க்கலாம்.
தனது அற்புதமான நடிப்பாற்றலால் ரசிகர்களுடைய உள்ளங்களைக் கவர்ந்த டிஎஸ்.பாலையா எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் தான் அவரோடு சேர்ந்து அறிமுகம் ஆனார். அந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் திறமை காட்டிய டிஎஸ்.பாலையா, ஒரு சில படங்களில் கதாநாயகனாகக் கூட நடித்து இருக்கிறார் என்பதை இன்றைக்கு சினிமா உலகில் உள்ள பலரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.
டிஎஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த முதல் படம் சித்ரா. 1946ல் வெளியான அந்தப் படத்தைத் தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ். அந்தப் படத்திலே டிஎஸ்.பாலையாவுக்கு ஜோடியாக நடித்தது அன்றைய காலகட்டத்திலே மிகவும் பிரபலமாக இருந்த கேஎல்.வசந்தா. அவர் கதாநாயகனாக நடித்த அடுத்த படம் 1948ல் வெளியானது.
அந்தப் படத்தின் பெயர் செண்பகவள்ளி. அதில் டிஎஸ்.பாலையாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயாள். அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த மோகினி என்ற படத்தில் 2வது கதாநாயகனாக நடித்து இருந்தார் டிஎஸ்.பாலையா. அந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி விஎன்.ஜானகி. டிஎஸ்.பாலையாவுக்கு ஜோடி மாதுரி தேவி. இந்தப் படத்தின் நீங்கலாக பிரசன்னா என்ற ஒரு மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி பத்மினியின் சகோதரியான லலிதா. தான் கதாநாயகனாக நடித்த பல படங்களில் சொந்தக் குரலில் பாடியும் இருக்கிறார் பாலையா. தமிழ்ல பாடுனது மட்டும் இல்லாமல் தான் நடித்த பிரசன்னா என்ற மலையாளப்படத்திலும் ஒரு பாடலைப் பாடி இருக்கிறார் என்பதுதான் முக்கியமான விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.



