ச்சீ இவ்வளவு கெட்டவார்த்தையா?!.. பேசியது விஜய் சேதுபதிதான்.. ஆனா அவரு இல்லையாம்!..

vijay sethupathi
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எதார்த்தமாக நடிப்பதில் வல்லவர். அனைவரையும் அரவணைத்து செல்வதில் நல்ல மனிதர் விஜய்சேதுபதி. தன்னை சார்ந்தவர்களை முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு கவனமாக பழகுபவர் மக்கள் செல்வன்.

vijaysethupathi
சமீபத்தில் பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் இவர் ஹீரோவாக நடித்த கடைசி படமான டிஎஸ்பி படம் மண்ணைக் கவ்வியது. மேலும் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் திரைப்படம், விக்ரம் திரைப்படம் என இரண்டுமே அவருக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
அதிலிருந்தே அவரை ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கே அணுக ஆரம்பித்தனர். இதனிடையில் பாலிவுட் பக்கம் சென்ற விஜய் சேதுபதி நடிகர் சாகித் கபூருடன் சேர்ந்து ‘ஃபார்ஷி’ என்ற வெப் சீரிஸில் நடித்தனர். இந்த சீரிஸ் சமீபத்தில் தான் ரிலீஸானது. ஆனால் இதை பார்க்கும் தமிழக ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி மீது பெரும் அதிர்ப்தியே ஏற்படும்..

vijaysethupathi sahit kapoor
ஏனெனில் இந்த சீரிஸில் விஜய் சேதுபதி மோசமான அளவில் கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். அவரே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள் தானாம். இதனால் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மதிப்பிற்கும் கெடுதல் ஏற்படும் என கருதி வருகின்றனர்.
ஆனால் நாம் நினைக்கிற அளவிற்கு அந்த சீரிஸில் பேசியது விஜய் சேதுபதி இல்லையாம். விஜய் டிவியில் மிமிக்ரி செய்யும் டிஎஸ்கே தானாம் . அவர் ஏற்கெனவே விஜய் சேதுபதி குரலில் பேசிதான் மிகப்பெரும் புகழைப் பெற்றார். அவர் தான் தமிழில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் பேசியிருக்கிறாராம்.

dsk
ஆனால் என்னதான் டப்பிங் பேசினாலும் அவர் குரல் வடிவிலேயே வசனங்கள் வரும் போது அவர் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு கண்டிப்பாக கலங்கம் ஏற்படும் என்று கோடம்பாக்கத்தில் பேசிவருகின்றனர்.
இதையும் படிங்க : அண்ணனுக்கும், தம்பிக்கும் கடும் போட்டி….ஒரே நாளில் ரிலீஸாகும் படங்களுக்கு பலத்த வரவேற்பு