சிம்புவுக்கு கிடைக்கல!. விஜய் ஆண்டனிக்கு சிக்கிடுச்சே!.. மனுஷன் டபுள் ஹேப்பி!..

Vijay antony: நடிகர் சிம்புவின் நடிப்பில் பத்து தல படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த படம் முடிந்த பின்னர் சில மாதங்கள் வெளிநாட்டில் இருந்தார் சிம்பு. அதன்பின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சொன்ன சரித்திர கதையில் சிம்பு நடிப்பதாகவும், அதை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஒரு வருடம் ஆகியும் படம் டேக் ஆப் ஆகவில்லை. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களுக்கு கொடுக்கும் விலையை குறைத்துவிட்டதால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின் வாங்கியது. ஏனெனில், தேசிங்கு பெரியசாமி சொன்ன கதைக்கு 150 கோடி பட்ஜெட் செலவாகும். எனவே, இந்த படத்திற்கு பதில் மணிரத்னத்தின் தக் லைப் படத்தில் நடிக்க சொல்ல சிம்புவும் நடித்தார்.
அந்த படம் முடிந்ந்துவிட்டது. எப்படியாவது தேசிங்கு பெரியசாமி சொன்ன சரித்திர கதையை படமாக்க ஆசைப்பட்ட சிம்பு பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார். ஆனால், யாரும் முன்வரவில்லை. துபாயில் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறக்கும் தொழில் அதிபர் கண்ணன் ரவியையும் சிம்பு அணுகினார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, தானே இப்படத்தை தயாரிப்பது என சிம்பு முடிவு செய்தார். அதேநேரம் இந்த படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

இந்நிலையில்தான் நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது கண்ணன் ரவியை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தான் நடித்துள்ள சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் ஆகிய 2 படங்களையும் அவருக்கு போட்டு காட்டியிருக்கிறார். வழக்கமாக கண்ணன் ரவி இருக்கும் பிஸியில் படம் பார்க்கவெல்லாம் அவருக்கு நேரமிருக்காது.
ஆனாலும், சக்தி திருமகன் படத்தை பார்த்ததும் இந்த படம் முதல்வன் படம் போல இருக்கிறது என சொல்லி பாராட்டியிருக்கிறார் கண்ணன் ரவி. அதோடு, உடனே அடுத்து ககன மார்கன் படத்தையும் பார்த்துவிட்டு 2 படங்களுமே சிறப்பாக இருப்பதாக பாராட்டிய கண்ணன் ரவி ‘இந்த 2 படங்களையும் நானே வாங்கி கொள்கிறேன்’ என சொல்லி விஜய் ஆண்டனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
அந்த இரண்டு படங்களையும் வாங்கி உலகம் முழுவதும் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொல்லிவிட்டாராம். இதனால், செம குஷியோடு சென்னை திரும்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி. சிம்புவுக்கு நடக்காத ஒன்று விஜய் ஆண்டனிக்கு அமைந்துவிட்டது.