Cinema History
டப்பிங்கில் மம்முட்டியை வாட்டி வதைத்த இயக்குனர்…. ஓவர் டென்ஷன்ல ‘ஓகே’ வாங்க நடிகர் செய்த ஐடியா
லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவான படம் ஆனந்தம். 2001ல் வெளியானது. முரளி, ரம்பா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைப் பார்ப்போம்.
தமிழ்த்திரை உலகில் குடும்பப்பாங்கான படங்களை இயக்குபவர் விக்ரமன். இவரது உதவியாளராக இருந்தவர் லிங்குசாமி. இவர் இயக்கிய முதல் படம் ஆனந்தம்.
டப்பிங்
Also read: 11 வருடங்களாக கடும் நஷ்டத்தில் சூர்யாவின் படங்கள்…. கங்குவா படத்துக்கு இத்தனை கோடி இழப்பா?
மம்முட்டி தான் ஹீரோ. இந்தப் படத்திற்கு முதலில் மம்முட்டி ஒரு வசனத்தை ‘நா தழு தழுக்க’ப் பேச வேண்டி இருந்தது. அது என்னன்னா ஒரு காட்சியில் முரளியின் குழந்தையோட சிகிச்சைக்காக பணம் சேர்த்து வைக்கிறார் மம்முட்டி.
அந்தப் பணத்தைப் பார்த்ததும் ரம்பாவுக்கு சந்தேகம் வருகிறது. அப்போது மம்முட்டி நா தழு தழுக்க, ‘இந்தப் பணம் என்னான்னு தெரிஞ்சா தாங்க மாட்டீங்கடா’ என்று பேச வேண்டும்.
இந்தக் காட்சிக்கு இயக்குனர் ரீடேக் சொன்னார். பல முறை மம்முட்டி பேசினாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. இன்னும் கொஞ்சம் அந்த ‘தாங்க மாட்டீங்கடா’ வார்த்தை தழுதழுத்த குரல்ல வரணும் என்பதில் உறுதியாக இருந்தார். மம்முட்டியும் பல கோணங்களில் பேசிப் பார்த்தார்.
டென்ஷன் ஆன மம்முட்டி
அவருக்கு திருப்தியே வரவில்லை. உடனே டென்ஷன் ஆன மம்முட்டி அவரை வெளியில உட்காரச் சொல்லுங்க. அங்கிருந்தே நான் பேசுறதைக் கேட்கட்டும் என்று சொல்லி விட்டாராம். உடனே வெளியில இருந்து கேட்டதும் அரை மனதுடன் ஓகே சொன்னாராம் லிங்குசாமி.
இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகக் காரணம் இந்தக் காட்சி என்றே சொல்லலாம். படம் முழுவதும் குடும்பப்பின்னணியில் அற்புதமாக இயக்கி இருந்தார் லிங்குசாமி.
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை
ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் ஆனந்தம். எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை தான்.
Also read: கர்ச்சீப் வச்சி மறச்சிட்டியே!.. கடற்கரையில் கிளுகிளுப்பு காட்டும் கங்குவா ஹீரோயின்!..
படத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
சிறந்த படத்துக்கான மாநில அரசின் விருதையும் பெற்றது. ஆசை ஆசையாய், அடி கூச்சத்தை, சூடித்தந்த, என்ன இதுவோ, கல்யாண வானில், பல்லாங்குழியின் ஆகிய பாடல்கள் உள்ளன.