More
Categories: Cinema News Jagan latest news

சினிமா மீதுள்ள மோகம்! கடைசியில் அம்மாவின் இறுதிச்சடங்கை கூட பண்ண முடியாத சோகம்

பாடகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாடகர் மலேசியா வாசுதேவன். கிட்டத்தட்ட 8000க்கும் அதிகமான பாடல்களை பாடிய மலேசியா வாசுதேவன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் பாடிக் கொண்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அங்கு நடந்த பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த மலேசியா வாசுதேவன் முதன் முதலில் இரத்தப்பேய் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் நடிகனாக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க : கமலின் படத்தை பார்த்துவிட்டு நைட் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு போன ரஜினி!.. நடந்தது இதுதான்!…

இவரின் கணீர் குரல் மக்களை வெகுவாக ஈர்த்தது. பாடுவதையும் தாண்டி இசையமைப்பாளராகவும் மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். பாடகராக, நடிகராக இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக என சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தார் மலேசியா வாசுதேவன்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகர்தான் மலேசியா வாசுதேவன். மலேசியாவில் இருந்து 1965 ஆம் ஆண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருக்கிறார் வாசுதேவன். அங்கு இருந்து வந்ததுமே தன்னுடைய பாஸ் போர்ட்டை கிழித்து போட்டுவிட்டாராம்.

இதையும் படிங்க : அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா

ஏனெனில் திரும்பவும் மலேசியா போகவேண்டும் என்றால் ஒரு சினிமாவில் சாதித்த பிறகு தான் போக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் வைத்து அதை கிழித்துப் போட்டிருக்கிறார். அதன் விளைவு மலேசியா வாசுதேவன்னின் தாயார் தயாளு என்பவர் மரணமடைய மலேசியா வாசுதேவனால் போகமுடியவில்லையாம்.

இருந்த பாஸ்போர்ட்டை கிழித்து போட்டதால் நினைத்த நேரத்தில் அவரின் இறுதிச் சடங்கை கூட மலேசியா வாசுதேவனால் செய்ய முடியாமல் போய்விட்டது. எந்தளவுக்கு சினிமா மீது அன்பு வைத்திருந்தார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

Published by
Rohini

Recent Posts