Categories: Cinema History Cinema News latest news

எம்ஜிஆரின் படங்களா? ஐய்யோ வேணாம் – பிச்சிக்கிட்டு ஓடிய ஆருர்தாஸ்! ஏன்னு தெரியுமா?

தேவர் பிலிம்ஸுக்காக எம்ஜிஆர் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களில் பெரும்பாலும் கதை வசனம் எழுதியவர் வசனகர்த்தா ஆரூர்தாஸ்தான். ஆனால் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் ஆருர்தாஸ் வசனம் எழுதவில்லையாம்.

அந்தப் படம்தான் தர்மம் தலைகாக்கும் என்ற திரைப்படம். அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் அய்யாப்பிள்ளை. ஆனால் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரியாதாம். அதன் பிறகு படப்பிடிப்பிற்கு வந்த எம்ஜிஆருக்கு இந்த விஷயம் தெரியவந்ததாம்.

இதையும் படிங்க : 10 பெண்கள்!.. பலான விஷயத்தில் சிக்கிய ஜெயிலர் வில்லன்!.. யார் இந்த விநாயகன்?..

ஆரூர்தாஸ் எம்ஜிஆர் படங்களை ஏன் புறக்கணித்து வந்தார் என்றால் தேவருக்கும் ஆருர்தாஸுக்கும் இடையே அவ்வப்போது சில பிரச்சினைகள் வந்து போய்க் கொண்டிருந்ததாம். இதை அறிந்த எம்ஜிஆர் ஆருர்தாஸை அழைத்து ஏன் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டாராம்.

அதற்கு ஆருர்தாஸ் நான் சொல்லப்போய் அதன் மூலமாக உங்கள் இருவருக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்று நினைத்துதான் சொல்லவில்லை என்று கூறினாராம். அதன் பிறகு எம்ஜிஆர் ஆருர்தாஸிடம் சரி நடந்தது எல்லாவற்றையும் மறந்து மீண்டும் தேவர் பிலிம்ஸோடு வந்து சேர்ந்து கொள் என்று கூறினாராம்.

இதையும் படிங்க : வெளிநாட்டில் திரிஷாவுடன் ஜாலி பர்ச்சஸ் செய்யும் விஜய்!.. அப்ப அந்த நியூஸ் உண்மைதானா?!..

ஆனால் ஆருர்தாஸ் இனிமே நான் தேவர் பிலிம்ஸ் பக்கமே வரமாட்டேன் என்று சொல்ல ஆனால் ரஜினி நீ மீண்டும் தேவர் பிலிம்ஸ் வந்து எனக்காக ஒரு படம் பண்ணுவாய் என்று சொன்னாராம். எம்ஜிஆர் சொன்னதை போலவே அவர் சொன்ன அடுத்த வருடமே  நீதிக்கு பின் பாசம் படத்திற்காக ஆருர்தாஸ்தான் வசனம் எழுதினாராம்.

Published by
Rohini