வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு தடங்கலா? ரஜினியால் விக்ரமுக்கு பறி போன வாய்ப்பு!

vikram
Rajini Vikram: தமிழ் சினிமாவில் ரஜினியின் ஆளுமை என்பது அளப்பரியாதது. அன்றிலிருந்து இன்று வரை ஒரு சூப்பர் ஸ்டாராகவே தன்னுடைய அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் அதே பெயருடனும் புகழுடனும் நிலைத்து நிற்கிறார். 73 வயதானாலும் இன்னும் அதே ஸ்டைலுடன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ரஜினி. இப்போது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுடன் போட்டி போட்டு வசூலிலும் தனக்கு நிகர் தானே என்பதை ஒவ்வொரு படங்களின் போதும் நிரூபித்து வருகிறார்.
அஜித் விஜய் சூர்யா விக்ரம் என அவருக்கு அடுத்தபடியாக பெரிய ஸ்டார்டம் உள்ள நடிகர்கள் இருந்தாலும் அவர்களால் கூட ரஜினியை நெருங்க முடியாத சூழ்நிலைதான். இந்த அளவுக்கு ஒரு பெரிய அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றார் ரஜினி. இந்த நிலையில் விக்ரமுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பட வாய்ப்பு ரஜினியால் தட்டிப் போயிருக்கிறது என்பதை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: தியேட்டருக்கு போய் இந்த 3 படங்களையும் பாக்கணும்னு ஆசை!.. மைக் மோகன் போடும் லிஸ்ட்..
2015 ஆம் ஆண்டு ராஜதந்திரம் என்ற படத்தை இயக்கியவர் அமித். வீரபாகு நடிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. ரசிகர்களும் இந்த படத்தை மனதார பாராட்டினர். அந்த அளவுக்கு திறமையாக இந்த படத்தை எடுத்திருந்தார் அமித். இவர் வேறு யாரும் இல்லை. பிரபல இசையமைப்பாளர் ஆன ஜிப்ரான் அவரின் சகோதரர்தான் இந்த அமித்.
இந்த படத்திற்கு பிறகு அமித் தாணு தயாரிப்பில் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்த நேரத்தில்தான் ரஜினியின் கபாலி படத்தை தயாரிக்கும் வாய்ப்பு தாணுவுக்கு வந்திருக்கிறது. அந்த நேரத்தில் ரஜினியா விக்ரமா என யோசிக்கும்போது எல்லோருடைய சாய்ஸும் ரஜினியாக தான் இருக்கும். அதேபோல் தான் தாணுவும் ரஜினியை வைத்து படத்தை தயாரிக்கலாம் என கபாலி படத்தை தயாரிக்க போய்விட்டார்.
இதையும் படிங்க: ஃபுல் நைட்டும் இளையராஜாவின் பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த இயக்குனர்… எந்தப் படம்னு தெரியுமா?
அதனால் விக்ரம் நடிப்பில் உருவாக இருந்த அந்த படம் அப்படியே டிராப்பானது. அதன் பிறகு அமித் எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை என்பதுதான் சோகம். இல்லையென்றால் விக்ரமுக்கும் ஒரு நல்ல படம் கிடைத்திருக்கும். அந்த படத்தின் மூலம் இயக்குனர் அமித்தின் கெரியரும் அடுத்தடுத்த நிலைக்கு சென்று இருக்கும்.