அந்த ஒரு படத்தில் நடிச்சதால 23 பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகை! இப்ப அவங்க நிலைமை?

by Rohini |
vindhya
X

vindhya

Actress Vindhya: தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கிறது. ஆனால் வந்த வாய்ப்பையும் நிலை நிறுத்திக் கொள்ள பல கஷ்டங்களை அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. வாய்ப்பு சரியாக அமைந்தால் மட்டும் போதும்.

அதை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டியதுதான். ஆனால் முதல் படத்தில் போட்ட அக்ரிமெண்ட்டால் அந்த நடிகைக்கு கிடைத்த 23 பட வாய்ப்பை தவறவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அந்த நடிகை. அவர் வேறு யாருமில்லை. நடிகை விந்தியா. சங்கமம் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான விந்தியா அந்தப் படத்தில் மிக அழகாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

தமிழே பேச தெரியாமல் நடனமே என்ன என தெரியாமல் சங்கமம் படத்தில் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்தார் விந்தியா. சங்கமம் படத்திற்கு முன் விந்தியா நடிக்கவேண்டிய திரைப்படமாக ரிதம் திரைப்படம்தான் அமைய வேண்டியது. விந்தியாவை முதலில் அர்ஜூன் பார்த்து இயக்குனர் வசந்திடம் சொல்ல அவர் போட்டோ சூட் எல்லாம் எடுத்துவிட்டார்.

ஆனால் சுரேஷ் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சங்கமம் படத்தில் நடிக்க வசந்த் விட்டுக் கொடுத்துவிட்டாராம். சங்கமம் படத்தில் நடிக்கும் போதே படத்தின் தயாரிப்பாளரான பிரமிடு நடராஜன் விந்தியாவை காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்தாராம்.

vindhya1

vindhya1

இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!

அதாவது படம் ரிலீஸாகும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என பிரமிடு நடராஜன் கூறியதால் விந்தியாவுக்கு வந்த 23 பட வாய்ப்பும் போச்சு என ஒரு பேட்டியில் விந்தியா கூறியிருந்தார். அதில் சரத்குமார் நடித்த ஒருவன் திரைப்படமும் அடங்கும். அது போக சினிமாவில் பெரிய பெரிய தயாரிப்பாளர்களின் படங்களும் அடங்கும் என விந்தியா கூறினார்.

ஆனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். ஜெயலலிதா மீது அதிக அன்பு கொண்ட விந்தியா இன்று வரை அதிமுக-விலேயே இருந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: என் வயசு என்ன? எனக்கே நடந்திருக்கு.. இந்த வயசு நடிகையுமா அவங்க விடல?

Next Story