More
Categories: Cinema History Cinema News latest news

அந்த விபத்தால் எனக்கு வித்தியாசமான நோய் வந்தது!.. படப்பிடிப்பில் அவதிப்பட்ட தனுஷ்…

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்குப் பிறகு அவர் நடித்த திருடா திருடி, காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் நடிகர் தனுஷ். தனுஷ் நடிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் சில படங்களில் நடிப்பதற்காக கடினமாக உழைத்தவர் தனுஷ்.

Advertising
Advertising

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் தனுஷின் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. அப்பொழுது வந்த காதல் கொண்டேன் போன்ற திரைப்படங்களை பார்க்கும் பொழுதே அது தெரியும். ஆனால் அதற்குப் பிறகு அவர் தனது நடிப்பை மிகவும் மேம்படுத்தினார் அதனை தொடர்ந்துதான் பாலிவுட் ஹாலிவுட் போன்ற துறைகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தனுஷ்.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் தொடரி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரயிலிலேயே எடுக்கப்பட்டது. ரயில்வேயில் இந்த படத்தை எடுப்பதற்காக தினமும் 5 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கிடையில் ஓடும் ரயிலில் படத்தை எடுப்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.

தனுஷிற்கு வந்த சங்கடம்:

அந்தப் படப்பிடிப்புக்கு முன்பு ஒருமுறை உயரத்தில் இருந்து விழுந்து தனுஷ்க்கு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்திற்கு பிறகு உயரத்தில் நின்றாலே தனுஷ்க்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்துவிடும். அப்படி ஒரு நோய் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தொடரி திரைப்படம் முழுக்க முழுக்க ரயிலின் மேலே நின்று எடுக்கும் காட்சிகளை கொண்டிருந்தது.

இதனை அறிந்த இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த காட்சிகள் அனைத்தையும் படமாக்கி இருந்தார். தனுஷ் ஒரு பேட்டியில் கூறும் பொழுது பிரபு சாலமன் இல்லாவிட்டால் அந்த காட்சிகளில் நான் நடித்திருப்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.

Published by
Rajkumar