அஜித், எச்.வினோத், போனிகபூர் இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது துணிவு திரைப்படம். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. வெளியானது நாள் முதலே ரசிகர்களின் ஆரவாரத்துடன் 25 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
துணிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், அமீர், பாவ்னி, சிபி, பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம், மகாநதி சங்கர் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க தாறுமாறு இசையில் படம் சூப்பர் ஹிட் ஆனது.
துணிவு படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டனர். ரிலீஸ் செய்த நாளிலிருந்து இன்று வரை கோடிக்கணக்கில் வசூல் மழையை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற வகையில் ஸ்கிரீன் ஸ்பேஸை சரியான விதத்தில் பகிர்ந்து அழகாக வடிமைத்திருந்தார் எச்.வினோத். சின்ன சின்ன கதாபாத்திரங்களானாலும் மனதில் நிற்க கூடிய வகையில் சித்தரிந்திருந்தார்.
அந்த வகையில் குறைவான சீன்களே வந்தாலும் படம் முழுக்க அத்தனை ரசிகர்களையும் தன்னை நோக்கி ஈர்க்க வைத்தார் பட்டிமன்ற பேச்சாளரான மோகன சுந்தரம். இவர் பட்டிமன்றத்தில் ஒரு நகைச்சுவை மன்னனாக திகழ்பவர். முக பாவனையை ஏற்ற இறக்கத்துடன் கொண்டு காமெடியாக பேசுவதில் வல்லவர்.
துணிவு படத்தில் மை.ப கதாபாத்திரத்தில் அருமையாக செய்திருந்தார். அவர் மூலமாக ஒரு வகையில் படத்தின் மீதான உற்சாகம் கூடியது என்று கூறலாம். இவரை பற்றி சித்ரா லட்சுமணன் கூறும் போது கண்டிப்பாக மோகன சுந்தரத்திற்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு காத்திருக்கின்றது என்று கூறினார். தொடர்ந்து பல படங்களில் இவரை பயன்படுத்தினால் நல்ல நடிகரை சினிமா பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது… என்னன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!