Cinema News
லூஸ்டாக்கில் வாய்விட்ட வெங்கட் பிரபு ; கடுப்பாகி விஜய் செய்த காரியம்: இதெல்லாம் தேவையா?!..
கோலிவுட்டில் பெரிய பரபரப்பாக இருப்பதே அஜித் மற்றும் விஜயின் அப் கம்மிங் படங்கள் தான். ஏற்கெனவே விஜயின் லியோ படம் முக்கால் வாசி முடிந்த நிலையில் இன்று தான் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் படத்திற்கான ஒரு பாடலை படமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் 2000 டான்சர்களை வைத்து அந்த பாடல்காட்சிகளை மிகப்பிரம்மாண்டமாக எடுத்து வருகின்றனர்.
படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. அதற்குள்ளாக விஜயின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் வந்து லியோ படத்தின் பிஸினஸை பாதிக்கிறது என லோகேஷும் அப்செட்டில் இருக்கிறாராம். அதுவும் போக போற இடங்களெல்லாம் வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படத்திற்கான அப்டேட்டை கேட்டு வருகின்றார்கள்.
சமீபத்தில் கூட சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூட கேட்ட போது கையெடுத்து கும்பிட்டு சொன்னா விஜய் கோபித்துக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பின்னனியில் இருக்கும் சம்பவத்தை மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.
அதாவது நேற்றிலிருந்து தளபதி 68 படத்தின் தலைப்பு இது தான் என்று சிஎஸ்கே பெயரை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவும் தனக்கே உரிய பாணியில் அவ்வப்போது படத்தை பற்றிய சில ஹிண்ட்களையும் கொடுத்து வருகிறார்.
மொத்தத்தில் விஜய் கடுப்பாகி வெங்கட் பிரபுவை அழைத்து ‘இனிமேல் லியோ படம் வெளியாகும் வரை அடுத்தப் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட் பற்றியும் வாயவே திறக்கக் கூடாது’ என்று கன்னாபின்னானு திட்டி அனுப்பிவிட்டாராம். அதே சமயம் இந்தப் படத்தில் விஜய்க்கான சம்பளம் 200 கோடி என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மையே இல்லையாம்.
இதையும் படிங்க : இப்படி ஒரு ரிசல்ட்டா? காதர் பாட்ஷா பார்த்து உஷாரான ஜெயம் ரவி!..