Cinema News
அட இப்படியொரு சாதனையா!.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பட்டையை கிளப்பும் லக்கி பாஸ்கர்!..
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் லக்கி பாஸ்கர் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கின்றது.
லக்கி பாஸ்கர்:
நடிகர் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர். அமரன் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. நேரடி தெலுங்கு படமாக உருவான லக்கி பாஸ்கர் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் காதலர் பெரிய தொழிலதிபராம்!.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டாரே!…
படத்தின் வசூல்:
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் சர்வதேச அளவில் 100 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. முதலில் தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு குறைந்த அளவு திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அடுத்தடுத்த நாள் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
லக்கி பாஸ்கர் கதை:
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த துல்கர் சல்மான் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். அப்போது குடும்ப சூழ்நிலை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக பணத்தை கையாடல் செய்கின்றார். அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கின்றார் என்கின்ற அதிரடியான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை களம் உருவாக்கப்பட்டிருந்தது.
துல்கர் சல்மான் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் நடிகை மீனாட்சி சௌத்ரி ஒரு குழந்தைக்கு அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் அமைத்திருந்தை பாடல்கள் மற்றும் பிஜிஎம் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருந்தது.
ஓடிடி ரிலீஸ்:
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து மிகச்சிறந்த வரவேற்பு பெற்ற லக்கி பாஸ்கர் திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஓடிடியில் இந்த திரைப்படத்தை அதிகளவு ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது. லக்கி பாஸ்கர் திரைப்படம் 15 நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா எம்ஜிஆரை சுட்டதுக்கு காரணம்… மூடிமறைத்தது ஏன்? பேரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
புதிய சாதனை:
நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கலக்கி வரும் லக்கி பாஸ்கர் திரைப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கின்றது. அதன்படி கடந்த வாரம் ஓடிடியில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் முதல் வாரத்திலேயே 5.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்படம் என்ற புகழை பெற்று இருக்கின்றது.