இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு டூப்பாக நடித்தவர் கோவை பாபு. இவர் சத்யம் தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றாராம். விவேக் வரும் காட்சியைப் பார்த்ததும் அவருக்கே புல்லரித்து விட்டதாம். நண்பர்களிடம் இது நான் தான்யான்னு சொல்கிறார்.
ஆனால் யாருமே நம்பவில்லையாம். அவ்வளவு மேட்ச்சா எடுத்துருக்காங்க. விவேக்கைப் பொருத்த வரை என்னை அவர் உயிரோடு இருக்கும்போதும் வாய்ப்பு கொடுத்து வாழ வைத்தார். இன்று அவர் இறந்தும் என்னை வாழ வைக்கிறார். இது வேற லெவல். இதைச் சொன்னா நான் அழுதுடுவேன் என நெகிழ்கிறார் கோவை பாபு.
படத்துல என்ன பண்ணி என்ன பண்றது? நான் வர மாட்டேன்ல விவேக் சார் தான வருவாருன்னு ஒரு ஏக்கம் இருந்தது. இவ்வளவு பிரம்மாண்டமான படத்தில் ஒரு சீனாவது நான் வருவேனா என்ற ஏக்கம் இருந்தது. ஷங்கர் சார் நான் நடிச்சதைப் பார்த்ததும் பாபு பிரமாதமா பண்ணிட்டேன்னு பாராட்டிட்டுப் போயிடுவாரு. என்ன பாராட்டி என்ன பண்றது?
படத்துல தான் நான் வரமாட்டேனே. விவேக் சார் தான வருவாருன்னு ஒரு ஏக்கம் வரும். நான் கூட ஷஙகர் சார்கிட்ட ஓபனா கேட்டேன். ‘இதுல எங்காவது ஒரு இடத்திலயாவது நான் வர மாட்டேனா’ன்னு. அதுக்கு ‘நீயா நடிச்சா கூட உனக்கு இவ்ளோ பேரு வந்துருக்காது.
விவேக்கா நடிக்கிற. அது உனக்கு ஒரு கிரெடிட் தான’ன்னு சொன்னாரு. ‘நாம இதோடு போகப்போறதுல்ல பாபு. அடுத்தடுத்து பண்ணுவோம்’னு என்னை சமாதானப்படுத்தினார் ஷங்கர். ஆனால் எனக்காக விவேக் சார் நடக்கிறது, பேசறது என எல்லா மேனரிசங்களையும் லேப்டாப்ல போட்டுக் காட்டினாரு.
செட்டுக்குப் போனா நான் விவேக் சாரா மாறிடுவேன். நான் நடக்கிறது எல்லாம் பார்த்த உடனே பாராட்டினாரு. நல்லா வந்துருச்சுன்னா அவரே மனம் திறந்து பாராட்டுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…