சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச்சட்டை படத்தை இயக்கினார். அந்த இரண்டு படங்களும் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
கொடி படத்தில் தனுஷை டபுள் ஆக்சன் ரோலில் நடிக்க வைத்திருந்தார். திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் அந்தப் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தனர். கொடி படத்தை தொண்டு மீண்டும் தனுஷை வைத்து பட்டாஸ் படத்தை இயக்கினார். அந்தப் படத்திலும் தனுசுக்கு இரட்டை வேடம். ஆனால், பட்டாஸ் படம் பெரிதாக ஓடாத நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் துரை செந்தில்குமாருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது!.. அல்லு அர்ஜுனுக்கு அல்லு இல்லை!.. புஷ்பா 2 நிலைமை இப்படி ஆகிடுச்சே?
விடுதலை முதல் பாகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய துரை செந்தில்குமார் அந்தப்படத்தின் முதல் 10 நிமிடங்கள் வரும் ட்ரெயின் சீன் முழுவதையும் இவர்தான் இயக்கியிருந்தார். வெற்றிமாறனின் உதவி இயக்குனரான இவர், விடுதலை படத்தை தொடர்ந்து சூரியை வைத்து கருடன் படத்தை இயக்கியுள்ளார்.
ஹீரோவாக சூரி மாறியுள்ள நிலையில் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூரியன் அடித்துள்ள கருடன் படம் இந்த மாதம் ஏன் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தை புரோமோட் செய்வதற்காக துரை செந்தில்குமார் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஏய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே!.. கோட் ஹீரோயின் கேரளாவில் என்ன பண்றாரு பாருங்க!..
கருடன் படத்தின் கதை வெற்றிமாறன் கதை அல்ல என்றும் ஆரம்பத்தில் புரமோஷனுக்காக அவரது கதை என சொல்லப்பட்டது. அவரே சொல்லிவிட்டார் என்றார். மேலும், இந்த படம் விஜய்க்காக அவர் உருவாக்கிய கதை அல்ல என்பதையும் விளக்கியுள்ளார்.
அடுத்ததாக லெஜண்ட் சரவணா படத்தை இயக்கப் போவது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த துரை செந்தில்குமார் எந்த ஒரு நடிகரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் ஓடும் என நினைப்பது எந்த அளவுக்கு தவறோ அதே போல லெஜண்ட் சரவணாவை வைத்து படம் இயக்கினால் ஃப்ளாப் தான் ஆகும் என நினைப்பதும் தவறுதான். அவரை வைத்து எந்த அளவுக்கு நல்ல படத்தை கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு உழைப்பை போட்டு கொடுப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மனுஷன் இப்படி மாறிட்டாரே!.. வெற்றிமாறனை எப்படி கூப்பிடுகிறார் தெரியுமா? வாய்பிளக்கும் திரையுலகம்!
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…