---Advertisement---

குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவரே உண்மையான லீடர்…யாரை மனதில் வைத்து பேசினார் துரை செந்தில்குமார்?

Published on: March 15, 2026
durai senthil kumar
---Advertisement---

‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லையென்றாலும் அடுத்த படமான லீடர் மூலம் மீண்டும் ஒரு மாஸ் என்ட்ரி கொடுக்கத் தயாராகிவிட்டார். ஆக்‌ஷன், சென்டிமென்ட், மற்றும் சஸ்பென்ஸ் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருகிறது.

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, ‘கருடன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார். லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ச்மீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மிகப்பெரிய் வரவேற்பை பெற்றது. லெஜண்ட் சரவணன் முர்றிலும் மாறுபட்டதோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் கூறுகையில், ஒரு குடும்பத்தை வழிநடத்தி, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனிதரே உண்மையான லீடர். அந்த வகையிலேயே இந்த படத்திற்கு லீடர் என்று தலைப்பை வைத்தேன் என்று கூறினார்.

தவெக தலைவர் விஜயின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றதும், விஜய் அவரது மகன், மகளிடம் கூட பேசுவதில்லை என்ற செய்திகள் வரும் சூழ்நிலையில் துரை செந்தில்குமார் கூறியது விஜயின் நடவடிக்கைகளை மனதில் வைத்துதான் என்று சமூகவலைதள்ங்களில் பேசிகொள்கிறார்கள்.