
Cinema News
படப்பிடிப்பில் நடந்த தீவிபத்து!.. ஒட்டம் பிடித்த நடிகர்.. தன்னந்தனியாக நின்ன நடிகை!..
1994 ஆம் ஆண்டில் வெளியானது ‘காதலன்’ திரைப்படம். இந்தப் படத்தை சங்கர் இயக்க குஞ்சுமோன் படத்தை தயாரித்து வெளியிட்டார். இவர்கள் இணையும் இரண்டாவது படமாக காதலன் திரைப்படம் விளங்கியது. ஏற்கெனவே ‘ஜெண்டில்மேன்’ படத்தின் வெற்றியால் மீண்டும் இவர்கள் இந்தப் படத்தின் மூலம் கூட்டணி அமைத்தார்கள்.

prabhudeva
படத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா லீடு ரோலில் நடிக்க ரகுவரன், வடிவேலு, எஸ்.பி.பாலசுப்பிரமணியன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். காதலன் திரைப்படம் ரொமான்ஸ் கலந்த காதல் படமாக திரில்லர் சப்ஜெக்ட்டுடன் வெளிவந்த படமாக விளங்கியது. படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை கூடுதல் சிறப்பு.
படத்தின் கதையைப் படி கவர்னரின் மகளை ஒரு கல்லூரி மாணவன் காதலிப்பது போன்றும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் மீதி படத்தின் கதையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பரதத்தில் விருப்பம் கொண்ட நக்மா தனது அரங்கேற்றத்தை நடத்த தன் அப்பாவிற்கு தெரியாமல் பிரபுதேவாவின் உதவியோடு அரங்கேற்றத்தை நடத்த,

prabhudeva nagma
அதனால் கோபமடைந்த நக்மாவின் அப்பா பிரபுதேவாவை பழிவாங்குவது போன்ற காட்சியில் பிரபுதேவா அற்புதமாக நடித்திருப்பார். அதில் அமைந்துள்ள அனைத்து பாடல்களும் இன்றளவும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.
ஊர்வசி பாடலாகட்டும், முக்காப்லா பாடலாகட்டும் அனைத்துப் பாடல்களும் இளசுகளை உற்சாகப்படுத்தும் பாடலாகவே காலந்தோறும் அமைந்த பாடலாக விளங்குகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட தீவிபத்து பற்றி அப்போதையை உதவிய இயக்குனரும் இன்றைய இயக்குனருமான வசந்தபாலன் ஒரு பேட்டியில் கூறினார்.

prahudeva nagma
அதாவது ஒரு பட்டாசு லாரியில் நக்மா பிரபுதேவா பொள்ளாச்சியில் இருந்து போவது மாதிரியான சீன். பின் பட்டாசுகளை போட்டு பட்டாசுகளை வெடித்து வருவார்கள். அப்போது அந்த பட்டாசு தவறுதலாக லாரியில் பட்டுவிட்டதாம். உடனே லாரியில் இருந்த அனைத்து பட்டாசுகளும் பற்ற ஆரம்பித்து விட்டதாம்.
இதையும் படிங்க : மோகன்ஜீக்கு கிடைச்ச மரியாதை கூட கிடைக்கலையே… விஜய் ஆண்டனி படத்தை அக்கடா என தூக்கிப்போட்ட உதயநிதி…
உடன் இருந்த பிரபுதேவா குதித்து ஓடி விட்டாராம். நக்மா மட்டும் இருக்கிறாராம். அவர் கூட உதவி இயக்குனர் வசந்த பாலனும் இருக்கிறாராம். அப்போது வசந்தபாலன் நக்மாவை தூக்கி கீழே தள்ளிவிட்டாராம். மிகவும் பத்திரமாக நக்மாவை காப்பாற்றினாராம் வசந்தபாலன். தன்னை காப்பாற்றியதற்காக வசந்தபாலனுக்கும் அவருடைய உதவியாளர்களுக்கும் சர்ட்கள் வாங்கிக் கொடுத்தாராம் நக்மா. இந்த பதிவை வசந்தபாலன் ஒரு பேட்டியில் கூறினார்.