படப்பிடிப்பின் போது பீறிட்டு வந்த இரத்தம்!.. கண்ணிமைக்கும் நேரத்தில் கேப்டன் செய்த செயல்!..

by Rohini |   ( Updated:2023-02-03 14:51:15  )
vijayakanth
X

vijayakanth

தமிழ் சினிமாவில் உன்னதமான கலைஞராக இருப்பவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த். இப்ப மட்டும் அவர் சாதாரணமான நிலையில் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால் அவரால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் எட்டா நிலையை அடைந்திருக்கும். அதே நேரம் நடிகர் சங்க பிரச்சினையையும் சுமூகமாக முடிந்திருக்கும்.

மேலும் அரசியலிலும் ஏதாவது சில மாற்றங்களும் நடந்திருக்கும். அந்த அளவுக்கு விஜயகாந்த் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். சொல்லப்போனால் பிரபலங்கள் மதிக்கும் மானசீக நடிகராகவே விஜயகாந்த் திகழ்கிறார்.

vijayaakanth1

vijayaakanth1

அவர் ஆரம்பகாலங்களில் செய்த உதவிகள், அர்ப்பணிப்புகள், தியாகங்கள், என அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். உதவி என்று வந்தோரை எப்பொழுதும் வெறுங்கையோடு திருப்பி அனுப்பியதில்லை. அதே போல் என்ன பிரச்சினை என்றாலும் அதை சுமூகமாக தீர்த்து வைக்கக் கூடியவர்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக விஜயகாந்திற்கு உதவியாளராக இருந்த துரைராஜ் என்பவர் விஜயகாந்த் பற்றிய செய்திகளை ஒரு பேட்டியில் கூறினார். ஒரு சமயம் விஜயகாந்த் பரதன் படப்பிடிப்பின் போது அதற்கான காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஜெயிலில் இருந்து தப்பித்து வருகிற காட்சியாம்.

இதையும் படிங்க : மாவீரன் திரைப்படத்தை மீண்டும் படமாக்கவுள்ளனரா?… உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்…

ஒரு குவாரியில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஜெயிலில் இருந்து தப்பி வரும் போது குவாரியில் இருந்து கடகடவென கீழே உருண்டு வருகிற காட்சி. அதில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கு கல் குத்தி காலில் இரத்தம் பீறிட்டு வந்திருக்கிறது. யாருமே கவனிக்கவில்லையாம்.

vijayakanth2

vijayakanth2

ஆனால் விஜயகாந்த் அதை பார்த்து உடனே அந்த நபரை தன் காரில் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு போக முயற்சித்திருக்கிறார். ஆனால் அதற்குள் பக்கத்தில் இருந்த அனைவரும் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்களாம். அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது, விஜயகாந்திற்கும் கல் குத்தி இரத்தம் வருகிறது என்று.

ஆனால் தன் மேல் கூட அக்கறை படாமல் மற்றவர்களுக்காக இந்த அளவுக்கு அக்கறை எடுத்து பொறுப்புடன் இருக்கும் நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை என்று அந்த உதவியாளர் கூறினார்.

இதையும் படிங்க : ஆர்யாவுக்கு ஜோடி ஜான்விகபூரா?.. தீப்பொறி ஆறுமுகமாக வெடித்த போனிகபூர்.. ட்விட்டரில் பதிலடி..

Next Story