ராஜஸ்தானில் ரஜினியை சுற்றி வளைத்துக் கொண்ட ரசிகர்கள்!.. ‘ஜெய்லர்’ படப்பிடிப்பில் காண்டான பிரபல நடிகர்..

by Rohini |   ( Updated:2023-04-15 10:02:55  )
rajini
X

rajini

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் ரஜினி.இவர் தற்போது ஜெய்லர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ரஜினியுடன் யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷரஃப் போன்ற முக்கிய புள்ளிகள் நடிக்கின்றனர்.

படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. கடைசியாக வெளியான அண்ணாத்த படம் ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லை. அதனால் இந்தப் படம் கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் அனைவரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெய்லர் படத்தை பற்றி அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு புதிய தகவலை கூறினார். அதாவது ஜெய்லர் பட்த்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் படமாக்கி கொண்டிருந்தார்களாம். அப்போது ரஜினியை பார்க்க அங்கு இருந்த மக்கள் திரண்டு வந்திருக்கின்றனர்.

அப்போது படக்குழு அவர்களை விரட்டியிருக்கின்றனர். அதன் பிறகு ரஜினி அனைவரையும் வரவழைத்து வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொரு ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாராம். இதை கவனித்துக் கொண்டிருந்த ஜாக்கி ஷரஃப் ரசிகர்களிடம் கொஞ்சம் கோபமாக நடந்து கொண்டாராம்.

அதற்கு பின்னனியில் இருக்கும் காரணம் ரஜினியின் உடல்நிலையையும் இவ்ளோ நேரம் எப்படி நிற்பார் என்ற அக்கறையிலும் தான் ரசிகர்களை விரட்டினாராம் ஜாக்கி ஷரஃப். இதை பாத்த ரஜினி ஜாக்கி ஷரஃபிடம் ‘ என்னை எப்பவோ ஒரு தடவை தான் பார்க்கிறார்கள், அதனால் விடுங்கள், போட்டா எடுத்துக் கொள்ளட்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க : விஜய் அரசியலுக்குள் வந்தால் நானும் வருவேன்- ஓப்பன் ஸ்டேட்மண்ட் விட்ட பிரபல காமெடி நடிகர்…

இதை கேட்ட ஜாக்கி ஷரஃபுக்கு ஒரே அதிர்ச்சி. எப்பேற்பட்ட நடிகர், இவ்ளோ ரசிகர்கள் கூடியும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாரே என்று ரஜினியை பார்த்து ஆச்சரியப்பட்டாராம்.

Next Story