சியான் விக்ரமுக்கு ஜோடியான வேட்டையன் பட நடிகை!.. அடுத்தடுத்து பெரிய படங்களை அசால்ட்டா பிடிக்கிறாரே!

சியான் 62 படத்தின் ஹீரோயின் குறித்த ஹாட்டான அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் அடுத்ததாக சியான் விக்ரமை வைத்து திருத்தணி பகுதியில் உருவாகும் கதையை படமாக்கி வருகிறார்.

சியான் 62 படத்தின் அறிவிப்பு டீசர் வெளியான போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தில் சியான் விக்ரமுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார். மேலும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோரும் சியான் 62 படத்தில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹிப் ஹாப் ஆதிக்கே டஃப் கொடுப்பாரு போல!.. சூப்பர் ஹீரோவான பிரபுதேவா.. அந்த மின்னலை விட மாட்றாங்களே!..

இதில் அந்த படத்தில் புதிதாக ஹீரோயினாக துஷாரா விஜயன் இணைந்துள்ள அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் இந்தியா முழுவதும் மொழிகளைத் தாண்டி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சித்தா படம் போலவே சியான் 62 படம் தரமான படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த மேட்டருக்கு காச அள்ளி அள்ளி கொடுப்பாரு! கவுண்டமணியை பற்றி இவ்வளவு இருக்கா?

ஆர்யா நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர் துஷாரா விஜயன். மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் சர்ச்சைக் கதையுடன் உருவான நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திலும் ஹீரோயினாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நடித்த துஷாரா விஜயன் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், தனுஷ் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை புக் செய்து வரும் துஷாரா விஜயன் அடுத்ததாக சியான் விக்ரமுடன் இணைந்து நடிக்கப் போவது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..

 

Related Articles

Next Story