மாமனார் பட நடிகையை ஜோடியாக்கிய தனுஷ்!.. ராயன் படத்துல இவர்தான் ஹீரோயினாம்!..

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் பிரிந்தாலும் இன்னமும் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தனுஷுக்கு எப்போதும் போல பாசம் அப்படியே உள்ளது. லால் சலாம் படம் வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் தனுஷ் தொடர்ந்து ட்வீட் போட்டு வாழ்த்தினார். ஆனால், அந்த படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொதப்பல் இயக்கத்தால் படுதோல்வியை அடைந்தது.

முதல் படத்திலேயே இயக்குநராக தனுஷ் ப. பாண்டி படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்நிலையில், அடுத்ததாக ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கார்த்தி 27 பட பூஜை!.. சிவகுமார் முதல் சூர்யா வரை யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க!..

இந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷுக்கு ஜோடியே இல்லையாப்பா ஒரு ஹீரோயின் போஸ்டர் கூட விடலையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது ராயன் படத்தின் ஹீரோயின் இவங்க தான் என போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ரீரிலிஸ் பரிதாபங்கள்!.. சினிமா தியேட்டர இப்படி K Tv மாதிரி ஆக்கி விட்டுடீங்களேயா!.. ரசிகர்கள் கலாய்!

ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் நடித்து வரும் துஷாரா விஜயன் தான் தனுஷின் ராயன் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறது சன் பிக்சர்ஸ்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை பண்ண காத்திருக்கிறார் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நடிகர்களும் திறமையானவர்களாக களமிறக்கி தனது படத்தை வெற்றிப் படமாக கொடுக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

 

Related Articles

Next Story